தொடர்ந்து படிக்கread this section continuously
அதுவிது வென்றவ மேகழி யாதேமதுவிரி பூங்குழல் மங்கைநல் லாளைப்பதிமது மேவிப் பணியவல் லார்க்குவிதிவழி தன்னையும் வென்றிட லாமே.
உரைmeaning
பாடல் #1230 இல் உள்ளபடி, முக்திக்கான ஆரம்பத்தை அறிந்து கொள்ளும் சரியான வழியைத் தெரிந்து கொள்ளாமல், அது என்றும் இது என்றும் பலவிதமான வழிகளில் சென்று வாழ்நாட்களை வீணாகக் கழிக்காமல், அடியவர்களை மயக்கும் தேன் கொண்டு மலர்ந்திருக்கும் நறுமணம் மிக்க பூக்களைச் சூடியிருக்கும் அழகிய கூந்தலுடன் என்றும் இளமையுடன் இருக்கும் நன்மையின் வடிவான இறைவியை, அவளோடு சேர்ந்திருக்கும் இறைவனையும் தமக்குள் வீற்றிருக்கும் இடத்தில் அணுகி உணர்ந்து பணிந்து வணங்க முடிந்தவர்களுக்கு, அவர்களின் விதி எனப்படும் அனைத்துக் கர்மங்களையும், ஆணவத்தையும், மாயையையும் வெல்ல முடியும்.
As in verse 1230, those who, without knowing the true way of knowing the beginning of liberation, do not waste their lives going here and there among many paths, but instead approach and realize, in the place where they dwell within themselves, the ever-young Goddess who is the very form of goodness, wearing her flowering, fragrant hair with the honey that enchants devotees, together with the Lord joined with her, and who worship and venerate them, are able to conquer all the deeds called fate, the ego, and the illusion.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
முக்திக்கான ஆரம்பத்தை அறிந்து கொள்ளும் சரியான வழியைத் தெரிந்து கொள்ளாமல், அது என்றும் இது என்றும் பலவிதமான வழிகளில் சென்று வாழ்நாட்களை வீணாகக் கழிக்காமல்,
Without knowing the true way of knowing the beginning of liberation, not wasting their lives going here and there among many paths,
- வரி 2Line 2
அடியவர்களை மயக்கும் தேன் கொண்டு மலர்ந்திருக்கும் நறுமணம் மிக்க பூக்களைச் சூடியிருக்கும் அழகிய கூந்தலுடன், என்றும் இளமையுடன் இருக்கும் நன்மையின் வடிவான இறைவியை,
the ever-young Goddess who is the very form of goodness, wearing her flowering, fragrant hair with the honey that enchants devotees,
- வரி 3Line 3
அவளோடு சேர்ந்திருக்கும் இறைவனையும் தமக்குள் வீற்றிருக்கும் இடத்தில் அணுகி உணர்ந்து பணிந்து வணங்க முடிந்தவர்களுக்கு,
together with the Lord joined with her, in the place where they dwell within themselves, those who can approach, realize, and worship and venerate them,
- வரி 4Line 4
அவர்களின் விதி எனப்படும் அனைத்துக் கர்மங்களையும், ஆணவத்தையும், மாயையையும் வெல்ல முடியும்.
are able to conquer all the deeds called fate, the ego, and the illusion.
திருமந்திரம் பாடல் #1231





