தொடர்ந்து படிக்கread this section continuously
சத்தியு நானுஞ் சயம்புவு மல்லதுமுத்தியை யாரும் முதலறி வாரில்லைஅத்திமேல் வித்திடி லத்தி பழுத்தக்கால்மத்தியி லேற வழியது வாமே.
உரைmeaning
பாடல் #1229 இல் உள்ளபடி, உண்மையான ஞான வழியில் சென்று அடையும் அசையும் சக்தியாகிய இறைவியும், ஆன்மாவும், தானாகவே இருக்கும் அசையாத சக்தியாகிய இறைவனும் இல்லாமல், முக்திக்கான ஆரம்பம் எது என்பதை அறிந்தவர்கள் வேறு யாரும் இல்லை. அத்திப் பழத்தின் தன்மையில் அது பூப்பதையோ காய்ப்பதையோ யாரும் பார்க்க முடியாது, அது பழுத்த பிறகே தெரிய வரும். அதுபோலவே, முக்திக்கான ஆரம்பத்தையும் அது நிகழும் பொழுது யாரும் அறிந்து கொள்ள முடியாது, ஆனால் அது இறுதி நிலையை அடைந்த பிறகே அங்கிருக்கும் இறை சக்தியை உணர்ந்து கொள்ள முடியும்; அதுவே முக்திக்கான ஆரம்பத்தை அறிந்து கொள்ளும் வழியாகும்.
As in verse 1229, other than the moving power that is the Goddess reached by walking the true path of knowledge, the soul, and the unmoving power that is the Lord who exists of himself, no one else has known what the beginning of liberation is. Just as with a fig, no one can see it flower or set fruit, and it becomes known only after it has ripened, so too no one can know the beginning of liberation as it is happening; only after it reaches its final state can the divine power seated there be realized, and that is the way of coming to know the beginning of liberation.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
உண்மையான ஞான வழியில் சென்று அடையும் அசையும் சக்தியாகிய இறைவியும், ஆன்மாவும், தானாகவே இருக்கும் அசையாத சக்தியாகிய இறைவனும் இல்லாமல்,
Other than the moving power that is the Goddess reached by walking the true path of knowledge, the soul, and the unmoving power that is the Lord who exists of himself,
- வரி 2Line 2
முக்திக்கான ஆரம்பம் எது என்பதை அறிந்தவர்கள் வேறு யாரும் இல்லை.
no one else has known what the beginning of liberation is.
- வரி 3Line 3
அத்திப் பழத்தின் தன்மையில் அது பூப்பதையோ காய்ப்பதையோ யாரும் பார்க்க முடியாது, அது பழுத்த பிறகே தெரிய வரும்.
Just as with a fig, no one can see it flower or set fruit, and it becomes known only after it has ripened.
- வரி 4Line 4
அதுபோலவே, முக்திக்கான ஆரம்பத்தையும் அது நிகழும் பொழுது யாரும் அறிந்து கொள்ள முடியாது; அது இறுதி நிலையை அடைந்த பிறகே அங்கிருக்கும் இறை சக்தியை உணர்ந்து கொள்ள முடியும், அதுவே முக்திக்கான ஆரம்பத்தை அறிந்து கொள்ளும் வழியாகும்.
So too no one can know the beginning of liberation as it is happening; only after it reaches its final state can the divine power seated there be realized, and that is the way of coming to know the beginning of liberation.
திருமந்திரம் பாடல் #1230





