தொடர்ந்து படிக்கread this section continuously
சன்மார்க்க மாகுஞ் சமைதரு மார்க்கமுந்துன்மார்க்க மானவை யெல்லாந் துரந்திடும்நன்மார்க்க தேவரும் நன்னெறி யாவதுஞ்சன்மார்க்க தேவியுஞ் சத்தியென் பாளே.
உரைmeaning
பாடல் #1228 இல் உள்ளபடி, இறைவனை அடைவதற்குச் செல்லுகின்ற செம்மையான வழிமுறையாக இருக்கும் சன்மார்க்கமே, அனைத்துச் சமயங்களும் இறைவனை அடைவதற்குத் தருகின்ற பலவித வழிகளாக இருக்கின்றது. பொய்யான வழிகள் அனைத்தும், உண்மையான ஞான வழியில் நடப்பவர்களை விட்டுத் தானாகவே விலகி விடும். நன்மையான வழிகளை அருளிக் காப்பாற்றுகின்ற அனைத்து விதமான தேவர்களாகவும், நன்மையான வழிமுறையாகவும், உண்மையான ஞான வழியில் சென்று அடையும் அருட் சக்தியாகவும், 'சக்தி' என்று எந்த அடைமொழியும் இல்லாமல் அழைக்கப்படுகின்ற இறைவியே இருக்கின்றாள்.
As in verse 1228, Sanmarga, the true and upright course that travels toward reaching the Lord, is itself the many ways that all religions offer for reaching the Lord. All the false paths fall away of their own accord from those who walk the true path of knowledge. The Goddess herself is all the kinds of gods who graciously guard and grant good paths, the good course itself, and the gracious power that is reached by going along the true path of knowledge, called, with no epithet added, simply "Sakthi".
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
இறைவனை அடைவதற்குச் செல்லுகின்ற செம்மையான வழிமுறையாக இருக்கும் சன்மார்க்கமே, அனைத்துச் சமயங்களும் இறைவனை அடைவதற்குத் தருகின்ற பலவித வழிகளாக இருக்கின்றது.
Sanmarga, the true and upright course that travels toward reaching the Lord, is itself the many ways that all religions offer for reaching the Lord.
- வரி 2Line 2
பொய்யான வழிகள் அனைத்தும், உண்மையான ஞான வழியில் நடப்பவர்களை விட்டுத் தானாகவே விலகி விடும்.
All the false paths fall away of their own accord from those who walk the true path of knowledge.
- வரி 3Line 3
நன்மையான வழிகளை அருளிக் காப்பாற்றுகின்ற அனைத்து விதமான தேவர்களாகவும், நன்மையான வழிமுறையாகவும் இறைவியே இருக்கின்றாள்.
The Goddess herself is all the kinds of gods who graciously guard and grant good paths, and the good course itself.
- வரி 4Line 4
உண்மையான ஞான வழியில் சென்று அடையும் அருட் சக்தியாகவும், "சக்தி" என்று எந்த அடைமொழியும் இல்லாமல் அழைக்கப்படுகின்ற இறைவியே இருக்கின்றாள்.
She is the gracious power that is reached by going along the true path of knowledge, called, with no epithet added, simply "Sakthi".
திருமந்திரம் பாடல் #1229





