தொடர்ந்து படிக்கread this section continuously
நுண்ணறி வாகும் நுழைபுலன் மாந்தர்க்குப்பின்னறி வாகும் பிரானறி வாற்றடஞ்செந்நெறி யாகும் சிவகதி சேர்வார்க்குத்தன்னெறி யாவது சன்மார்க்க மாமே.
உரைmeaning
பாடல் #1227 இல் உள்ளபடி, பேரறிவை நோக்கிச் செல்லுகின்ற சாதகர்களுக்கு பேரறிவின் நுண்ணியமான அறிவாக இருக்கின்ற இறைவியே அவர்களுக்குப் புத்தி நுட்பமான அறிவைக் கொடுக்கின்றாள். அவர்களுக்குப் பின்னால் இருந்து ஆட்டுவிக்கின்ற அறிவாக இருப்பது இறைவனுடைய பேரறிவாகும். சிவத்தோடு ஒன்றாகக் கலக்க வேண்டும் என்று இறைவனது பேரறிவை அறிந்து கொண்டு, அதன் வழியே செல்லுகின்ற சாதகர்களுக்கு, அவர்கள் செல்லுகின்ற செம்மையான வழிமுறையாக இருப்பதுவே சன்மார்க்கம் என்று அழைக்கப்படுகின்றது.
As in verse 1227, to seekers who go toward the great knowledge, the Goddess, who is the fine, subtle knowledge within that great knowledge, gives them a mind of refined understanding. The knowledge that drives them from behind is the great knowledge of the Lord himself. To seekers who come to know the Lord's great knowledge, wishing to merge as one with Sivam, and who travel that way, the true and upright course they travel by is what is called Sanmarga.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
பேரறிவை நோக்கிச் செல்லுகின்ற சாதகர்களுக்கு பேரறிவின் நுண்ணியமான அறிவாக இருக்கின்ற இறைவியே அவர்களுக்குப் புத்தி நுட்பமான அறிவைக் கொடுக்கின்றாள்.
To seekers who go toward the great knowledge, the Goddess, who is the fine, subtle knowledge within that great knowledge, gives them a mind of refined understanding.
- வரி 2Line 2
அவர்களுக்குப் பின்னால் இருந்து ஆட்டுவிக்கின்ற அறிவாக இருப்பது இறைவனுடைய பேரறிவாகும்.
The knowledge that drives them from behind is the great knowledge of the Lord himself.
- வரி 3Line 3
சிவத்தோடு ஒன்றாகக் கலக்க வேண்டும் என்று இறைவனது பேரறிவை அறிந்து கொண்டு அதன் வழியே செல்லுகின்ற சாதகர்களுக்கு,
To seekers who come to know the Lord's great knowledge, wishing to merge as one with Sivam, and who travel that way,
- வரி 4Line 4
அவர்கள் செல்லுகின்ற செம்மையான வழிமுறையாக இருப்பதுவே சன்மார்க்கம் என்று அழைக்கப்படுகின்றது.
the true and upright course they travel by is what is called Sanmarga.
திருமந்திரம் பாடல் #1228





