தொடர்ந்து படிக்கread this section continuously
மார்க்கங்க ளீன்ற மனோன்மணி மங்கலியார்க்கு மறிய அரியா ளவளாகும்வாக்கும் மனமும் மருவியொன் றாய்விட்டநோக்கும் பெருமைக்கு நுண்ணறி வாகுமே.
உரைmeaning
பாடல் #1226 இல் உள்ளபடி, பிரணவ மந்திரத்துக்குள் அடங்கி இருக்கும் அனைத்து உயிர்களுக்கும் இறைவனை நோக்கிச் சென்று அடைகின்ற வழிகளைக் கொடுத்தருளிய இறைவியானவள், இறைவனும் இறைவியும் சேர்ந்த மனோன்மணியாக நன்மையின் வடிவமாகவே இருக்கின்றாள். எவராலும் அவ்வளவு எளிதில் அறிந்து கொள்வதற்கு மிகவும் அரிதானவளாக அவள் இருக்கின்றாள். சிற்றறிவின் சிந்தனைகளையும், அதன் மூலம் நிகழும் செயல்களையும் விட்டுவிட்டு, இறைவனோடு ஒன்றாகிவிட்ட பேரறிவை நோக்கிச் செல்லுகின்ற சிறப்பைப் பெற்ற சாதகர்களுக்கு, பேரறிவின் நுண்ணியமான அறிவாக இறைவியே இருக்கின்றாள்.
As in verse 1226, the Goddess who has graciously given all lives gathered within the pranava mantra the ways by which they go toward the Lord and reach him is Manonmani, the form of Lord and Goddess joined as one, herself the very form of goodness. She is exceedingly rare for anyone to know so easily. To seekers who have won the special grace of leaving behind the thoughts of the small mind and the deeds those thoughts bring about, and who go toward the great knowledge that has become one with the Lord, the Goddess herself is the fine, subtle knowledge within that great knowledge.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
பிரணவ மந்திரத்துக்குள் அடங்கி இருக்கும் அனைத்து உயிர்களுக்கும் இறைவனை நோக்கிச் சென்று அடைகின்ற வழிகளைக் கொடுத்தருளிய இறைவியானவள், இறைவனும் இறைவியும் சேர்ந்த மனோன்மணியாக நன்மையின் வடிவமாகவே இருக்கின்றாள்.
The Goddess who has graciously given all lives gathered within the pranava mantra the ways by which they go toward the Lord and reach him is Manonmani, the form of Lord and Goddess joined as one, herself the very form of goodness.
- வரி 2Line 2
எவராலும் அவ்வளவு எளிதில் அறிந்து கொள்வதற்கு மிகவும் அரிதானவளாக அவள் இருக்கின்றாள்.
She is exceedingly rare for anyone to know so easily.
- வரி 3Line 3
சிற்றறிவின் சிந்தனைகளையும், அதன் மூலம் நிகழும் செயல்களையும் விட்டுவிட்டு, இறைவனோடு ஒன்றாகிவிட்ட பேரறிவை நோக்கிச் செல்லுகின்ற சிறப்பைப் பெற்ற சாதகர்களுக்கு,
To seekers who have won the special grace of leaving behind the thoughts of the small mind and the deeds those thoughts bring about, and who go toward the great knowledge that has become one with the Lord,
- வரி 4Line 4
பேரறிவின் நுண்ணியமான அறிவாக இறைவியே இருக்கின்றாள்.
the Goddess herself is the fine, subtle knowledge within that great knowledge.
திருமந்திரம் பாடல் #1227





