தொடர்ந்து படிக்கread this section continuously
தானந்த மேலே தருஞ்சிகை தன்னுடன்ஆனந்த மோகினி யம்பொற் றிருவொடுமோனையில் வைத்து மொழிதரு கூறதுஆனவை யோமெனு மவ்வுயிர் மார்க்கமே.
உரைmeaning
பாடல் #1225 இல் உள்ளபடி, பரசிவமாகவே ஆகிவிட்ட சாதகருடைய தலை உச்சிக்கு மேல் இருக்கும் பரவெளியில் பேரொளியாக வீற்றிருக்கும் சிவத்தின் சடைமுடியாக வருகின்ற ஒளிக்கீற்றுகளே, பேரின்பத்தில் அசைந்து ஆடுகின்ற சக்தியாகவும், அவளது தூய்மையான பொன் போன்ற திருஉருவமாகவும் இருக்கின்றது. இவர்கள் இருவரையும் முதன்மையாக வைத்து ஓதுகின்ற அனைத்து மந்திரங்களுக்குள்ளும் சரிசமமான பாகமாக இருப்பது, அனைத்துமாகிய ஓம் எனும் பிரணவ மந்திரமாகும். இந்தப் பிரணவ மந்திரத்துக்குள் அடங்கி இருக்கும் அனைத்து உயிர்களுக்கும், இறைவனை நோக்கிச் சென்று அடைகின்ற வழியாக அதுவே இருக்கின்றது.
As in verse 1225, above the crown of the seeker who has become one with Parasivam, in the vast space that lies beyond, the streaks of light that come as the matted locks of Shiva, who dwells there as a great radiance, are themselves the power that sways and dances in supreme bliss, and her own pure, gold-like sacred form. Within all the mantras chanted with these two held as foremost, the equal, shared part that runs through them all is the pranava mantra, Om, which is everything. For all lives that lie gathered within this pranava mantra, it is itself the way by which they go toward the Lord and reach him.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
பரசிவமாகவே ஆகிவிட்ட சாதகருடைய தலை உச்சிக்கு மேல் இருக்கும் பரவெளியில் பேரொளியாக வீற்றிருக்கும் சிவத்தின் சடைமுடியாக வருகின்ற ஒளிக்கீற்றுகளே, பேரின்பத்தில் அசைந்து ஆடுகின்ற சக்தியாகவும் இருக்கின்றது.
Above the crown of the seeker who has become one with Parasivam, in the vast space that lies beyond, the streaks of light that come as the matted locks of Shiva, who dwells there as a great radiance, are themselves the power that sways and dances in supreme bliss.
- வரி 2Line 2
அது அவளது தூய்மையான பொன் போன்ற திருஉருவமாகவும் இருக்கின்றது.
It is also her own pure, gold-like sacred form.
- வரி 3Line 3
இவர்கள் இருவரையும் முதன்மையாக வைத்து ஓதுகின்ற அனைத்து மந்திரங்களுக்குள்ளும் சரிசமமான பாகமாக இருப்பது, அனைத்துமாகிய ஓம் எனும் பிரணவ மந்திரமாகும்.
Within all the mantras chanted with these two held as foremost, the equal, shared part that runs through them all is the pranava mantra, Om, which is everything.
- வரி 4Line 4
இந்தப் பிரணவ மந்திரத்துக்குள் அடங்கி இருக்கும் அனைத்து உயிர்களுக்கும், இறைவனை நோக்கிச் சென்று அடைகின்ற வழியாக அதுவே இருக்கின்றது.
For all lives that lie gathered within this pranava mantra, it is itself the way by which they go toward the Lord and reach him.
திருமந்திரம் பாடல் #1226





