தொடர்ந்து படிக்கread this section continuously
தானிகழ் மோகினி சார்வான யோகினிபோன மயமுடை யாரடி போற்றுவர்ஆனவ ராவியி னாகிய அச்சிவத்தானாம் பரசிவ மேலது தானே.
உரைmeaning
பாடல் #1224 இல் உள்ளபடி, ஐந்து தொழில்களையும் புரியும் இறைவியை தமக்குள் அறிந்து கொண்ட சாதகர், அவருக்குள் எப்போதும் இயங்கிக் கொண்டிருக்கும் குண்டலினி சக்தியையும், அதைச் சார்ந்திருக்கும் யோகத்தின் காரியமாக விளங்கும் சக்தியையும் தாண்டி மேல் நிலைக்குச் சென்று, பராசக்தியின் தன்மையை அடைந்து அவளின் திருவடியைப் போற்றி வணங்குவார்கள். அவ்வாறு இறைவியின் திருவடிகளைப் போற்றி வணங்கிக் கொண்டிருக்கும் சாதகர்களின் ஆன்மா, பரம்பொருளாகிய இறைவனின் அம்சமான சிவம் எனும் நிலையை அடைந்து, அதையும் தாண்டி அனைத்திற்கும் மேலான நிலையில் இருக்கும் அசையா சக்தியாகிய பரசிவத்தோடு ஒன்றாகக் கலந்துவிடும்.
As in verse 1224, the seeker who has come to know within himself the Goddess who carries out the five kinds of work goes beyond the kundalini power that always moves within him and the power that arises as the fruit of the yoga resting on it, rises to the state above, attains the nature of Parasakti, and worships and venerates her sacred feet. The soul of seekers who thus worship and venerate the Goddess's sacred feet attains the state called Sivam, the aspect of the Supreme Being who is the Lord, and going beyond that too, merges as one with Parasivam, the unmoving power that stands above all.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
ஐந்து தொழில்களையும் புரியும் இறைவியை தமக்குள் அறிந்து கொண்ட சாதகர், அவருக்குள் எப்போதும் இயங்கிக் கொண்டிருக்கும் குண்டலினி சக்தியையும் யோகத்தின் காரியமாக விளங்கும் சக்தியையும் தாண்டி மேல் நிலைக்குச் செல்வார்.
The seeker who has come to know within himself the Goddess who carries out the five kinds of work goes beyond the kundalini power that always moves within him and the power that arises as the fruit of the yoga resting on it, and rises to the state above.
- வரி 2Line 2
அவ்வாறு சென்று பராசக்தியின் தன்மையை அடைந்து அவளின் திருவடியைப் போற்றி வணங்குவார்கள்.
Rising so, he attains the nature of Parasakti and worships and venerates her sacred feet.
- வரி 3Line 3
அவ்வாறு இறைவியின் திருவடிகளைப் போற்றி வணங்கிக் கொண்டிருக்கும் சாதகர்களின் ஆன்மா, பரம்பொருளாகிய இறைவனின் அம்சமான சிவம் எனும் நிலையை அடையும்.
The soul of seekers who thus worship and venerate the Goddess's sacred feet attains the state called Sivam, the aspect of the Supreme Being who is the Lord.
- வரி 4Line 4
அதையும் தாண்டி, அனைத்திற்கும் மேலான நிலையில் இருக்கும் அசையா சக்தியாகிய பரசிவத்தோடு ஒன்றாகக் கலந்துவிடும்.
Going beyond that too, it merges as one with Parasivam, the unmoving power that stands above all.
திருமந்திரம் பாடல் #1225





