தொடர்ந்து படிக்கread this section continuously
ஆகிய கோதண்டத் தாகு மனோன்மணிஆகிய வைம்ப துடனே யடங்கிடும்ஆகும் பராபரை யோடப் பரையவள்ஆகும் அவள்ஐங் கருமத்தள் தானே.
உரைmeaning
பாடல் #1223 இல் உள்ளபடி, சாதகரின் உடலைத் தாங்கிக் கொண்டு இறைவியாகவே இருக்கும் சுழுமுனை நாடியில் வீற்றிருக்கின்ற சக்தியாக, இறைவனும் இறைவியும் ஒன்றாகச் சேர்ந்த மனோன்மணி இருக்கின்றாள். பாடல் #1222 இல் உள்ளபடி ஓங்காரம் எழுகின்ற இந்தச் சுழுமுனை நாடிக்குள் இருந்து வெளிப்படும் ஐம்பது எழுத்துகளும், மனோன்மணிக்குள்ளேயே அடங்கி விடும். மனோன்மணி சக்தியாக சுழுமுனை நாடியில் வீற்றிருப்பதே, அசையாத சக்தியும் அசையும் சக்தியும் ஒன்றாகச் சேர்ந்த பராபரையும், அதில் சரிபாதியாகிய அசையும் சக்தியாகிய பரை எனும் இறைவியும் ஆகும். இந்த இறைவியே ஐந்து விதமான தொழில்களைப் புரிந்து கொண்டு இருக்கின்றாள்.
As in verse 1223, in the sushumna channel that bears the seeker's body and is itself the Goddess, the power that dwells enthroned is Manonmani, in whom the Lord and the Goddess have joined as one. As in verse 1222, the fifty letters that come forth from within this sushumna channel, where the sound Om arises, are all gathered within Manonmani. Manonmani dwelling as power in the sushumna channel is itself Paraparai, the joining of the unmoving power and the moving power as one, and within that, the exact half that is the moving power is the Goddess called Parai. That very Goddess carries out five kinds of work.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
சாதகரின் உடலைத் தாங்கிக் கொண்டு இறைவியாகவே இருக்கும் சுழுமுனை நாடியில் வீற்றிருக்கின்ற சக்தியாக, இறைவனும் இறைவியும் ஒன்றாகச் சேர்ந்த மனோன்மணி இருக்கின்றாள்.
In the sushumna channel that bears the seeker's body and is itself the Goddess, the power that dwells enthroned is Manonmani, in whom the Lord and the Goddess have joined as one.
- வரி 2Line 2
ஓங்காரம் எழுகின்ற இந்தச் சுழுமுனை நாடிக்குள் இருந்து வெளிப்படும் ஐம்பது எழுத்துகளும் மனோன்மணிக்குள்ளேயே அடங்கி விடும்.
The fifty letters that come forth from within this sushumna channel, where the sound Om arises, are all gathered within Manonmani.
- வரி 3Line 3
மனோன்மணி சக்தியாக சுழுமுனை நாடியில் வீற்றிருப்பதே, அசையாத சக்தியும் அசையும் சக்தியும் ஒன்றாகச் சேர்ந்த பராபரையும், அதில் சரிபாதியாகிய அசையும் சக்தியாகிய பரை எனும் இறைவியும் ஆகும்.
Manonmani dwelling as power in the sushumna channel is itself Paraparai, the joining of the unmoving power and the moving power as one, and within that, the exact half that is the moving power is the Goddess called Parai.
- வரி 4Line 4
இந்த இறைவியே ஐந்து விதமான தொழில்களைப் புரிந்து கொண்டு இருக்கின்றாள்.
That very Goddess carries out five kinds of work.
திருமந்திரம் பாடல் #1224





