திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1223

நான்காம் தந்திரம்8. ஆதார ஆதேயம்

தொடர்ந்து படிக்கread this section continuously

ஆமது அங்கியு மாதியு மீசனும்மாமது மண்டல மாருத மாதியும்ஏமது சீவன் சிகையங் கிருண்டிடக்கோமலர்க் கோதையுங் கோதண்ட மாகுமே.

உரை

பாடல் #1222 இல் உள்ளபடி, சாதகர் தமக்குள் காணும் இறைவனின் மேல் பேரன்பு கொண்ட இறைவியின் திருவுருவமானது, அக்னியாகவும், ஆதிப் பரம்பொருளாகவும், இறைவனாகவும், மிகப் பெரியதாக விரிந்து பரவி இருக்கும் அக்னி-சூரிய-சந்திரன் ஆகிய மூன்று மண்டலங்களாகவும், வாயு முதலாகிய ஐந்து பூதங்களாகவும், அதிலிருந்து உருவாகி உலகத்திற்கு இறங்கி வருகின்ற உயிராகவும், அந்த உயிரைத் தாங்கி இருக்கின்ற உடலாகவும், அதற்குள் உண்மையை மறைத்துக் கொண்டிருக்கும் மாயையாகவும் இருக்கின்றது. அந்த இறைவியே, மேன்மை மிகுந்த மலர்களைச் சூடிக்கொண்டிருக்கும் பேரழகு பொருந்திய கூந்தலுடன், சாதகரின் உடலைத் தாங்கிக் கொண்டு அதன் நடுவில் இருக்கின்ற சுழுமுனை நாடியாகவே இருக்கின்றாள்.

வரி வாரியாக

  • வரி 1

    சாதகர் தமக்குள் காணும் இறைவியின் திருவுருவம் அக்னியாகவும், ஆதிப் பரம்பொருளாகவும், இறைவனாகவும் இருக்கின்றது.

  • வரி 2

    மிகப் பெரியதாக விரிந்து பரவி இருக்கும் அக்னி-சூரிய-சந்திரன் ஆகிய மூன்று மண்டலங்களாகவும், வாயு முதலாகிய ஐந்து பூதங்களாகவும் இருக்கின்றது.

  • வரி 3

    அதிலிருந்து உருவாகி உலகத்திற்கு இறங்கி வருகின்ற உயிராகவும், அந்த உயிரைத் தாங்கி இருக்கின்ற உடலாகவும், அதற்குள் உண்மையை மறைத்துக் கொண்டிருக்கும் மாயையாகவும் இருக்கின்றது.

  • வரி 4

    அந்த இறைவியே, மேன்மை மிகுந்த மலர்களைச் சூடிக்கொண்டிருக்கும் பேரழகு பொருந்திய கூந்தலுடன், சாதகரின் உடலைத் தாங்கிக் கொண்டு அதன் நடுவில் இருக்கும் சுழுமுனை நாடியாகவே இருக்கின்றாள்.

திருமந்திரம் பாடல் #1223

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout