தொடர்ந்து படிக்கread this section continuously
உணர்ந்தெழு மந்திர மோமெனு முள்ளேமணந்தெழு மாங்கதி யாதிய தாகுங்குணந்தெழு சூதனுஞ் சூதியுங் கூடிக்கணந்தெழுங் காணுமக் காமுகை யாமே.
உரைmeaning
பாடல் #1221 இல் உள்ளபடி, இறைவனும் இறைவியும் சேர்ந்து இருக்கும் உண்மை நிலையை சாதகர் பரிபூரணமாக உணர்ந்து கொள்ளும் பொழுது, அவருக்குள்ளிருந்து எழுகின்ற மந்திரமானது ஓம் எனும் பிரணவ மந்திரத்தின் உட்பொருளாகும். சாதகர் அந்த உட்பொருளை உணர்ந்து கொள்ளும் பொழுது, அவருக்குள்ளிருந்து நறுமணத்துடன் எழுகின்ற அந்த உட்பொருளே அவர் சென்று சேருகின்ற இறுதியான இடமாகவும் ஆதிப் பரம்பொருளாகவும் இருக்கின்றது. அந்த ஆதிப் பரம்பொருளின் இரண்டு தன்மைகளாக, இதுவரை ஒளிந்து கொண்டிருக்கும் கள்வனாகிய இறைவனும் கள்வியாகிய இறைவியும் வெளிப்பட்டு ஒன்றாகச் சேர்ந்து, இறைவனின் மேல் பேரன்பு கொண்ட இறைவியின் திருவுருவமாக சாதகருக்குக் காட்சி கொடுப்பார்கள்.
As in verse 1221, when the seeker perfectly realizes the true state in which the Lord and the Goddess dwell joined together, the mantra that rises within him is the inner meaning of the pranava mantra, Om. When the seeker realizes that inner meaning, that very inner meaning, rising within him together with fragrance, is both the final place he goes and reaches and the primal Supreme Being. As the two natures of that primal Supreme Being, the Lord as the thief and the Goddess as the thief's companion, who until now had stayed hidden, come out and join as one, and appear before the seeker in the sacred form of the Goddess carrying great love for the Lord.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
இறைவனும் இறைவியும் சேர்ந்து இருக்கும் உண்மை நிலையை சாதகர் பரிபூரணமாக உணர்ந்து கொள்ளும் பொழுது, அவருக்குள்ளிருந்து எழுகின்ற மந்திரமானது ஓம் எனும் பிரணவ மந்திரத்தின் உட்பொருளாகும்.
When the seeker perfectly realizes the true state in which the Lord and the Goddess dwell joined together, the mantra that rises within him is the inner meaning of the pranava mantra, Om.
- வரி 2Line 2
சாதகர் அந்த உட்பொருளை உணர்ந்து கொள்ளும் பொழுது, அவருக்குள்ளிருந்து நறுமணத்துடன் எழுகின்ற அந்த உட்பொருளே அவர் சென்று சேருகின்ற இறுதியான இடமாகவும் ஆதிப் பரம்பொருளாகவும் இருக்கின்றது.
When the seeker realizes that inner meaning, that very inner meaning, rising within him together with fragrance, is both the final place he goes and reaches and the primal Supreme Being.
- வரி 3Line 3
அந்த ஆதிப் பரம்பொருளின் இரண்டு தன்மைகளாக, இதுவரை ஒளிந்து கொண்டிருக்கும் கள்வனாகிய இறைவனும் கள்வியாகிய இறைவியும் வெளிப்பட்டு ஒன்றாகச் சேர்வார்கள்.
As the two natures of that primal Supreme Being, the Lord as the thief and the Goddess as the thief's companion, who until now had stayed hidden, come out and join as one.
- வரி 4Line 4
இறைவனின் மேல் பேரன்பு கொண்ட இறைவியின் திருவுருவமாக சாதகருக்குக் காட்சி கொடுப்பார்கள்.
They appear before the seeker in the sacred form of the Goddess carrying great love for the Lord.
திருமந்திரம் பாடல் #1222





