தொடர்ந்து படிக்கread this section continuously
நின்றனள் நேரிழை யோடுட னேர்படஇன்றெ னகம்படி யேழு முயிர்ப்பெய்துந்துன்றிய வோரொன் பதின்மருஞ் சூழலுள்ஒன்றுயர் வோதி யுணர்ந்துநின் றாளே.
உரைmeaning
பாடல் #1220 இல் உள்ளபடி, சாதகருக்குள் இனிமையாக வீற்றிருக்கும் இறைவி தமது மேலான நிலைக்கு ஏற்ற அழகிய அணிகலன்களை அணிந்து கொண்டு, சாதகரோடு சேர்ந்து அவருக்குள் நீண்டு பரவி இருக்கும் ஒரு பொழுதிலேயே, சாதகருக்குள் இருக்கும் ஏழு சக்கரங்களும் மேன்மையான நிலையில் சக்தியூட்டம் பெறுகிறது. அதன் பிறகு சாதகருக்குள் இருக்கும் பத்து வாயுக்களும் ஒன்றாகச் சேர்ந்து உயர்ந்த நிலையில் பிராணனாக மாறி, அதில் இறைவியின் நாமம் எப்போதும் இயல்பிலேயே இடைவிடாமல் ஓதிக் கொண்டே இருக்கும் போது, இறைவனும் இறைவியும் சேர்ந்து இருக்கும் உண்மை நிலையை சாதகர் பரிபூரணமாக உணர்ந்து கொள்ளும்படி, இறைவி அவருக்குள் நின்று அருள்புரிகின்றாள்.
As in verse 1220, the Goddess who dwells sweetly within the seeker wears ornaments fitting her exalted state, and even as she spreads through him, joined with the seeker, the seven chakras within him receive an exalted charge of power. After that, the ten vital airs within the seeker come together and rise into the state of prana, and within it the Goddess's own name keeps repeating of its own nature, without break, at all times. While this repetition continues, the Goddess stands within the seeker and grants her grace so that he may perfectly realize the true state in which the Lord and the Goddess dwell joined together.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
சாதகருக்குள் இனிமையாக வீற்றிருக்கும் இறைவி தமது மேலான நிலைக்கு ஏற்ற அழகிய அணிகலன்களை அணிந்து கொண்டு, சாதகரோடு சேர்ந்து அவருக்குள் நீண்டு பரவி இருக்கும் ஒரு பொழுதிலேயே,
The Goddess who dwells sweetly within the seeker wears ornaments fitting her exalted state, and even as she spreads through him, joined with the seeker,
- வரி 2Line 2
சாதகருக்குள் இருக்கும் ஏழு சக்கரங்களும் மேன்மையான நிலையில் சக்தியூட்டம் பெறுகிறது.
the seven chakras within him receive an exalted charge of power.
- வரி 3Line 3
அதன் பிறகு சாதகருக்குள் இருக்கும் பத்து வாயுக்களும் ஒன்றாகச் சேர்ந்து உயர்ந்த நிலையில் பிராணனாக மாறி, அதில் இறைவியின் நாமம் எப்போதும் இயல்பிலேயே இடைவிடாமல் ஓதிக் கொண்டே இருக்கும்.
After that, the ten vital airs within the seeker come together and rise into the state of prana, and within it the Goddess's own name keeps repeating of its own nature, without break, at all times.
- வரி 4Line 4
இறைவனும் இறைவியும் சேர்ந்து இருக்கும் உண்மை நிலையை சாதகர் பரிபூரணமாக உணர்ந்து கொள்ளும்படி, இறைவி அவருக்குள் நின்று அருள்புரிகின்றாள்.
So that the seeker may perfectly realize the true state in which the Lord and the Goddess dwell joined together, the Goddess stands within him and grants her grace.
திருமந்திரம் பாடல் #1221





