திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1220

நான்காம் தந்திரம்8. ஆதார ஆதேயம்

தொடர்ந்து படிக்கread this section continuously

ஆயிழை யாளொடு மாதிப் பரமிடம்ஆயதோ ரண்டவை யாறு மிரண்டுளஆய மனந்தோ றறுமுக மவைதனில்ஏயவார் குழலி யினிதுநின் றாளே.

உரை

பாடல் #1219 இல் உள்ளபடி, சக்தி வடிவமாக மாறிய சாதகரின் உடலுக்குள், அழகிய ஆபரணங்களை அணிந்த இறைவியோடு ஆதிப் பரம்பொருளாகிய இறைவனும் சேர்ந்து வீற்றிருக்கின்றார். சாதகர் தமது எண்ணத்தால் அவர்களை நோக்கி நெருங்கிச் செல்லும் போது, அவர்கள் இருவரும் சேர்ந்த அம்சமானது சாதகருக்குள் இருக்கும் ஆறு ஆதாரங்களிலும், தலை உச்சியிலுள்ள சகஸ்ரதளத்திலும், தலை உச்சியைத் தாண்டி இருக்கும் இடத்திலும் ஆகிய எட்டு இடங்களிலும் வந்து வீற்றிருக்கும். அதன் விளைவால் புனிதமாக மாறிய சாதகரின் மனமும் அவருக்குள் இருக்கும் ஆறு ஆதாரங்களும் இறைவியின் திருமுகமாக மாறி, அதில் நறுமணம் வீசும் நீண்ட கூந்தலையுடைய இறைவி இனிமையாக வீற்றிருக்கின்றாள்.

வரி வாரியாக

  • வரி 1

    சக்தி வடிவமாக மாறிய சாதகரின் உடலுக்குள், அழகிய ஆபரணங்களை அணிந்த இறைவியோடு ஆதிப் பரம்பொருளாகிய இறைவனும் சேர்ந்து வீற்றிருக்கின்றார்.

  • வரி 2

    சாதகர் தமது எண்ணத்தால் அவர்களை நோக்கி நெருங்கிச் செல்லும் போது, அவர்கள் இருவரும் சேர்ந்த அம்சமானது சாதகருக்குள் இருக்கும் ஆறு ஆதாரங்களிலும் வந்து வீற்றிருக்கும்.

  • வரி 3

    தலை உச்சியிலுள்ள சகஸ்ரதளத்திலும், தலை உச்சியைத் தாண்டி இருக்கும் இடத்திலும் ஆகிய எட்டு இடங்களிலும் அது வீற்றிருக்கும்.

  • வரி 4

    அதன் விளைவால் புனிதமாக மாறிய சாதகரின் மனமும் ஆறு ஆதாரங்களும் இறைவியின் திருமுகமாக மாறி, அதில் நறுமணம் வீசும் நீண்ட கூந்தலையுடைய இறைவி இனிமையாக வீற்றிருக்கின்றாள்.

திருமந்திரம் பாடல் #1220

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout