திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1218

நான்காம் தந்திரம்8. ஆதார ஆதேயம்

தொடர்ந்து படிக்கread this section continuously

நாதனும் நாலொன் பதின்மருங் கூடிநின்றோதிடுங் கூட்டங்க ளோரைந் துளஅவைவேதனு மீரொன் பதின்மரு மேவிநின்றாதியு மந்தமு மாகிநின் றாளே.

உரை

பாடல் #1217 இல் உள்ளபடி, இறைவியின் சரிபாகமாக இருக்கின்ற இறைவனின் அம்சமாக இருக்கும் சாதகரின் ஆன்மாவோடு முப்பத்தாறு தத்துவங்களும் இனிமையுடன் பெருகி ஒன்றாகக் கூடி, சாதகருக்குள் வீற்றிருந்து இறைவனை வணங்குவதற்கு உதவுகின்ற ஐந்து புலன்களாகவும் உடலாகவும் இருக்கின்றன. அதன்பிறகு, சாதகரின் உடலே பிரம்மனாகவும், பதினெட்டு விதமான தேவ கணங்களாகவும் இனிமையுடன் பெருகிப் பரவி வீற்றிருந்து இறைவியைத் துதிக்கும்போது, அவள் சாதகருக்குள் முதலாகவும் முடிவாகவும் வீற்றிருந்து அருளுவாள் என இப்பாடல் கூறுகிறது.

வரி வாரியாக

  • வரி 1

    பாடல் #1217 இல் உள்ளபடி, இறைவியின் சரிபாகமாக இருக்கின்ற இறைவனின் அம்சமாக இருக்கும் சாதகரின் ஆன்மாவோடு முப்பத்தாறு தத்துவங்களும் இனிமையுடன் பெருகி ஒன்றாகக் கூடுகின்றன.

  • வரி 2

    சாதகருக்குள் வீற்றிருந்து இறைவனை வணங்குவதற்கு உதவுகின்ற ஐந்து புலன்களாகவும் உடலாகவும் அவை இருக்கின்றன.

  • வரி 3

    அதன்பிறகு, சாதகரின் உடலே பிரம்மனாகவும், பதினெட்டு விதமான தேவ கணங்களாகவும் இனிமையுடன் பெருகிப் பரவி வீற்றிருந்து இறைவியைத் துதிக்கின்றது.

  • வரி 4

    அப்போது அவள் சாதகருக்குள் முதலாகவும் முடிவாகவும் வீற்றிருந்து அருளுவாள் என இப்பாடல் கூறுகிறது.

திருமந்திரம் பாடல் #1218

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout