திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1217

நான்காம் தந்திரம்8. ஆதார ஆதேயம்

தொடர்ந்து படிக்கread this section continuously

பாகம் பராசத்தி பைம்பொற் சடைமுடிஏக மிருதய மீரைந்து திண்புயம்மோக முகமைந்து முக்கண் முகந்தொறும்நாக முரித்து நடஞ்செய்யும் நாதர்க்கே.

உரை

பாடல் #1216 இல் உள்ளபடி, அருள் பாலிக்கின்ற இறைவனோடு சரிசமமான பாகமாக இருக்கின்ற பராசக்தியான இறைவியின் சரிபாதியாக இருக்கின்ற இறைவன், பசும்பொன்னால் பின்னப்பட்டதுபோல் பொன்நிறத்தில் மின்னும் சடையை அணிந்த முடியை உடையவர். இறைவியும் தாமும் ஒன்றாகவே இருக்கின்ற மனதைக் கொண்டு, பத்துத் திசைகளையும் தாங்கி நிற்கும் வலிமையான பத்துத் தோள்களைக் கொண்டவர். அடியவர்களைத் தம்பால் ஈர்க்கின்ற ஐந்து திருமுகங்களைக் கொண்டு, அந்த ஐந்து முகத்திலும் மூன்று திருக்கண்களை உடையவர். காட்டு யானையின் தோலை உரித்துத் தமக்கு ஆடையாக அணிந்து போர்த்திக்கொண்டு, முயலகனின் மேல் நின்று திருநடனம் ஆடுகின்ற நடராஜராக, இறைவியின் சரிபாகமாக இருக்கின்றார் என இப்பாடல் கூறுகிறது.

வரி வாரியாக

  • வரி 1

    பாடல் #1216 இல் உள்ளபடி, அருள் பாலிக்கின்ற இறைவனோடு சரிசமமான பாகமாக இருக்கின்ற பராசக்தியான இறைவியின் சரிபாதியாக இருக்கின்ற இறைவன், பசும்பொன்னால் பின்னப்பட்டதுபோல் பொன்நிறத்தில் மின்னும் சடையை அணிந்த முடியை உடையவர்.

  • வரி 2

    இறைவியும் தாமும் ஒன்றாகவே இருக்கின்ற மனதைக் கொண்டு, பத்துத் திசைகளையும் தாங்கி நிற்கும் வலிமையான பத்துத் தோள்களைக் கொண்டவர்.

  • வரி 3

    அடியவர்களைத் தம்பால் ஈர்க்கின்ற ஐந்து திருமுகங்களைக் கொண்டு, அந்த ஐந்து முகத்திலும் மூன்று திருக்கண்களை உடையவர்.

  • வரி 4

    காட்டு யானையின் தோலை உரித்துத் தமக்கு ஆடையாக அணிந்து போர்த்திக்கொண்டு, முயலகனின் மேல் நின்று திருநடனம் ஆடுகின்ற நடராஜராக, இறைவியின் சரிபாகமாக இருக்கின்றார் என இப்பாடல் கூறுகிறது.

திருமந்திரம் பாடல் #1217

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout