திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1215

நான்காம் தந்திரம்8. ஆதார ஆதேயம்

தொடர்ந்து படிக்கread this section continuously

கலந்துநின் றாள்கன்னி காதல னோடுங்கலந்துநின் றாளுயிர் கற்பன வெல்லாங்கலந்துநின் றாள்கலை ஞானங்க ளெல்லாம்கலந்துநின் றாள்கன்னி காலமு மாமே.

உரை

பாடல் #1214 இல் உள்ளபடி, சாதகருக்குள் கலந்துநிற்கின்ற இறைவியானவள் தாமாகத் தனித்திராமல், என்றும் இளமையுடன் இறைவனுடன் சேர்ந்தே இருக்கின்றாள். அவள் உயிர்கள் அனைத்தும் கற்கின்ற கல்விகளாகவும், அந்தக் கல்வியைக் கொண்டு செய்கின்ற அனைத்து செயல்களுக்கான அறிவாகவும் இருக்கின்றாள். அவளே என்றும் இளமையுடன் அனைத்து விதமான காலங்களாகவும் இருக்கின்றாள் என இப்பாடல் கூறுகிறது.

வரி வாரியாக

  • வரி 1

    பாடல் #1214 இல் உள்ளபடி, சாதகருக்குள் கலந்துநிற்கின்ற இறைவியானவள் தாமாகத் தனித்திராமல், என்றும் இளமையுடன் இறைவனுடன் சேர்ந்தே இருக்கின்றாள்.

  • வரி 2

    அவள் உயிர்கள் அனைத்தும் கற்கின்ற கல்விகளாக இருக்கின்றாள்.

  • வரி 3

    அந்தக் கல்விகளைக் கொண்டு செய்கின்ற அனைத்து செயல்களுக்கான அறிவாகவும் இருக்கின்றாள்.

  • வரி 4

    அவளே என்றும் இளமையுடன் அனைத்து விதமான காலங்களாகவும் இருக்கின்றாள் என இப்பாடல் கூறுகிறது.

திருமந்திரம் பாடல் #1215

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout