தொடர்ந்து படிக்கread this section continuously
நிலாமய மாகிய நீள்படி கத்தின்சிலாமய மாகுஞ் செழுந்தர ளத்தின்சுலாமய மாகுஞ் சுரிகுழற் கோதைகலாமய மாகக் கலந்துநின் றாளே.
உரைmeaning
பாடல் #1213 இல் உள்ளபடி, சாதகருக்குள் முழுவதும் பரவி வீற்றிருக்கும் இறைவியானவள், நிலவைப் போன்ற குளிர்ந்த ஒளியை வீசும் நீண்ட படிகக் கல்லைப் போன்ற வெண்மையை உடையவள். கல்லால் செதுக்கப்பட்ட சிலையைப் போன்ற அழகிய வடிவத்துடன், சிறந்த முத்துப் போன்ற இயல்பிலேயே பிரகாசிக்கும் தன்மையை உடையவள். சுருண்டிருக்கும் அழகிய கூந்தலில் வாசனை மிக்க மலர்களைச் சூடியிருப்பவள். அவள் சாதகருக்குள்ளிருந்து, பாடல் #1189 இல் உள்ளபடி உடலின் இயக்கத்திற்கு உதவும் பதினாறு கலைகளாகக் கலந்துநிற்கின்றாள் என இப்பாடல் கூறுகிறது.
As in verse 1213, this verse declares that the Goddess who pervades and dwells entirely within the seeker has a whiteness like the long crystal that casts moonlight's cool radiance. She has a beautiful form like a statue carved of stone, and by her very nature shines with the brilliance of a fine pearl. Her beautiful, curling hair is adorned with fragrant flowers. From within the seeker, as in verse 1189, she stands merged as the sixteen kalas that aid the working of the body.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
பாடல் #1213 இல் உள்ளபடி, சாதகருக்குள் முழுவதும் பரவி வீற்றிருக்கும் இறைவியானவள், நிலவைப் போன்ற குளிர்ந்த ஒளியை வீசும் நீண்ட படிகக் கல்லைப் போன்ற வெண்மையை உடையவள்.
As in verse 1213, the Goddess who pervades and dwells entirely within the seeker has a whiteness like the long crystal that casts moonlight's cool radiance.
- வரி 2Line 2
கல்லால் செதுக்கப்பட்ட சிலையைப் போன்ற அழகிய வடிவத்துடன், சிறந்த முத்துப் போன்ற இயல்பிலேயே பிரகாசிக்கும் தன்மையை உடையவள்.
She has a beautiful form like a statue carved of stone, and by her very nature shines with the brilliance of a fine pearl.
- வரி 3Line 3
சுருண்டிருக்கும் அழகிய கூந்தலில் வாசனை மிக்க மலர்களைச் சூடியிருப்பவள்.
Her beautiful, curling hair is adorned with fragrant flowers.
- வரி 4Line 4
அவள் சாதகருக்குள்ளிருந்து, பாடல் #1189 இல் உள்ளபடி உடலின் இயக்கத்திற்கு உதவும் பதினாறு கலைகளாகக் கலந்துநிற்கின்றாள் என இப்பாடல் கூறுகிறது.
From within the seeker, as in verse 1189, this verse declares that she stands merged as the sixteen kalas that aid the working of the body.
திருமந்திரம் பாடல் #1214





