திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1213

நான்காம் தந்திரம்8. ஆதார ஆதேயம்

தொடர்ந்து படிக்கread this section continuously

ஆமத் தினிதிருந் தன்ன மயத்தினள்ஓமத்தி லேயு மொருத்தி பொருந்தினள்நாம நமசிவ யென்று இருப்பார்க்குநேமத் துணைவி நிலாவிநின் றாளே.

உரை

பாடல் #1212 இல் உள்ளபடி, சாதகருக்கு அமிழ்தத்தைக் கொடுக்கின்ற இறைவியானவள், அதனால் கிடைக்கும் பேரின்பமாகவும், சாதகர் உண்ணும் உணவாகவும் இருந்து, அந்த உணவைச் செரிக்க வைக்கின்ற நெருப்பாகவும், குண்டலினி சக்தியின் அக்னியாகவும் சாதகரோடு எப்போதும் சேர்ந்திருக்கின்றாள். அவளது திருநாமமாகிய 'நமசிவய' எனும் மந்திரத்தை எண்ணித் தியானத்தில் இருப்பவர்களுக்கு, அவர்கள் தினந்தோறும் தவறாமல் கடைபிடிக்கும் நியமங்களுக்கு (பாடல் #556 இல் காண்க) துணையாகவும் இருந்து, அவர்களுக்குள் முழுவதும் பரவி வீற்றிருக்கின்றாள் என இப்பாடல் கூறுகிறது.

வரி வாரியாக

  • வரி 1

    பாடல் #1212 இல் உள்ளபடி, சாதகருக்கு அமிழ்தத்தைக் கொடுக்கின்ற இறைவியானவள் அதனால் கிடைக்கும் பேரின்பமாகவும், சாதகர் உண்ணும் உணவாகவும் இருக்கின்றாள்.

  • வரி 2

    அந்த உணவைச் செரிக்க வைக்கின்ற நெருப்பாகவும், குண்டலினி சக்தியின் அக்னியாகவும் சாதகரோடு எப்போதும் சேர்ந்திருக்கின்றாள்.

  • வரி 3

    அவளது திருநாமமாகிய 'நமசிவய' எனும் மந்திரத்தை எண்ணித் தியானத்தில் இருப்பவர்களுக்கு,

  • வரி 4

    அவர்கள் தினந்தோறும் தவறாமல் கடைபிடிக்கும் நியமங்களுக்கு (பாடல் #556 இல் காண்க) துணையாகவும் இருந்து, அவர்களுக்குள் முழுவதும் பரவி வீற்றிருக்கின்றாள் என இப்பாடல் கூறுகிறது.

திருமந்திரம் பாடல் #1213

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout