திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1212

நான்காம் தந்திரம்8. ஆதார ஆதேயம்

தொடர்ந்து படிக்கread this section continuously

மேலா மருந்தவ மேன்மேலும் வந்தெய்தக்காலால் வருந்திக் கழிவர் கணத்திடைநாலா நளினநின் றேத்திநட் டுச்சிதன்மேலா மெழுத்தின ளாமத்தி னாளே.

உரை

பாடல் #1211 இல் உள்ளபடி, இறைவனோடு சேர்ந்து தலை உச்சியில் உள்ள சகஸ்ரதளத்தில் வீற்றிருக்கும் இறைவியோடு குண்டலினி சக்தியைச் சேர்க்கும் மேன்மையான அரிய தவங்களை மேலும் மேலும் விடாமல் மேற்கொண்டு, அதனால் கிடைக்கும் பலனைப் பெறாமலும், தமது மூச்சுக்காற்றைக் கட்டுப்படுத்தாமலும், உலகப் பற்றுக்களில் சிக்கித் துன்பப்பட்டுத் தமது வாழ்நாளை வீணாகக் கழித்து, ஒரு கண நேரத்தில் உயிரை விட்டுவிடுபவர்கள் பலர். அப்படி இல்லாமல், நான்கு இதழ்கள் கொண்ட மூலாதாரத்தில் அசைந்து ஆடுகின்ற குண்டலினி சக்தியை முறையாகச் செய்யும் தியானத்தின் மூலம் விடாமல் செய்து, தமது உடலின் நடுவில் இருக்கும் சுழுமுனை நாடி வழியே மேலேற்றிச் சென்று, அதன் உச்சியில் இருக்கும் சகஸ்ரதளத்தில் சேர்த்துவிட்டால், அங்கு அனைத்திற்கும் மேலானதாகிய ஓங்கார எழுத்தின் உருவமாக வீற்றிருக்கின்ற இறைவியானவள், சாதகருக்கு அமிழ்தத்தைக் கொடுத்து அதுவே உணவாக இருக்கும்படி செய்து அருளுவாள் என இப்பாடல் கூறுகிறது.

வரி வாரியாக

  • வரி 1

    பாடல் #1211 இல் உள்ளபடி, இறைவனோடு சேர்ந்து தலை உச்சியில் உள்ள சகஸ்ரதளத்தில் வீற்றிருக்கும் இறைவியோடு குண்டலினி சக்தியைச் சேர்க்கும் மேன்மையான அரிய தவங்களை மேலும் மேலும் விடாமல் மேற்கொள்பவர்கள் பலர்,

  • வரி 2

    அதனால் கிடைக்கும் பலனைப் பெறாமலும், தமது மூச்சுக்காற்றைக் கட்டுப்படுத்தாமலும், உலகப் பற்றுக்களில் சிக்கித் துன்பப்பட்டுத் தமது வாழ்நாளை வீணாகக் கழித்து, ஒரு கண நேரத்தில் உயிரை விட்டுவிடுவார்கள்.

  • வரி 3

    அப்படி இல்லாமல், நான்கு இதழ்கள் கொண்ட மூலாதாரத்தில் அசைந்து ஆடுகின்ற குண்டலினி சக்தியை முறையாகச் செய்யும் தியானத்தின் மூலம் விடாமல் செய்து, தமது உடலின் நடுவில் இருக்கும் சுழுமுனை நாடி வழியே மேலேற்றிச் சென்று, அதன் உச்சியில் இருக்கும் சகஸ்ரதளத்தில் சேர்த்துவிட்டால்,

  • வரி 4

    அங்கு அனைத்திற்கும் மேலானதாகிய ஓங்கார எழுத்தின் உருவமாக வீற்றிருக்கின்ற இறைவியானவள், சாதகருக்கு அமிழ்தத்தைக் கொடுத்து அதுவே உணவாக இருக்கும்படி செய்து அருளுவாள் என இப்பாடல் கூறுகிறது.

திருமந்திரம் பாடல் #1212

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout