திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1211

நான்காம் தந்திரம்8. ஆதார ஆதேயம்

தொடர்ந்து படிக்கread this section continuously

ஆலமுண் டானமு தாங்கவர் தம்பதஞ்சாலவந் தெய்துந் தவத்தின்பந் தான்வருங்கோலிவந் தெய்துங் குவிந்த பதவையோடேலவந்து ஈண்டி யிருந்தனள் மேலே.

உரை

ஆலகால விஷத்தைத் தாம் ஏற்றுக்கொண்டு அமரத்துவம் தருகின்ற சிவ அமிழ்தத்தை விண்ணுலகத்தில் இருக்கும் தேவர்களுக்கு அருளிய இறைவனின் திருவடிகளைச் சரணாகதியாகக் கொண்டு வீற்றிருக்கும் சாதகர்களுக்கு, இறைவன் தாம் தேவர்களுக்கு அருளிய சிவ அமிழ்தத்தைக் கொடுத்து இறப்பில்லாத நிலையை அருளுகின்றார். அதன்பிறகு அவர்கள் சிவ அமிழ்தம் அருந்தியதின் பயனாகச் சிவ இன்பமும் கிடைக்கப்பெற்று, அதிலேயே இறைவனோடு சேர்ந்து வீற்றிருப்பார்கள். அப்போது, குண்டலினி சக்தி வந்து சேருகின்ற இடமாகிய சுழுமுனை நாடியின் உச்சித் துளையில் நின்று ஆடுகின்ற இறைவியும், முன்னதாகவே வந்து இறைவனோடு சேர்ந்து தலை உச்சியிலுள்ள சகஸ்ரதளத்தில் வீற்றிருப்பாள் என இப்பாடல் கூறுகிறது.

வரி வாரியாக

  • வரி 1

    ஆலகால விஷத்தைத் தாம் ஏற்றுக்கொண்டு அமரத்துவம் தருகின்ற சிவ அமிழ்தத்தை விண்ணுலகத்தில் இருக்கும் தேவர்களுக்கு அருளிய இறைவனின் திருவடிகளைச் சரணாகதியாகக் கொண்டு வீற்றிருக்கும் சாதகர்களுக்கு,

  • வரி 2

    இறைவன் தாம் தேவர்களுக்கு அருளிய சிவ அமிழ்தத்தைக் கொடுத்து இறப்பில்லாத நிலையை அருளுகின்றார். அதன்பிறகு அவர்கள் சிவ அமிழ்தம் அருந்தியதின் பயனாகச் சிவ இன்பமும் கிடைக்கப்பெற்று, அதிலேயே இறைவனோடு சேர்ந்து வீற்றிருப்பார்கள் என இப்பாடல் கூறுகிறது.

  • வரி 3

    அப்போது, குண்டலினி சக்தி வந்து சேருகின்ற இடமாகிய சுழுமுனை நாடியின் உச்சித் துளையில் நின்று ஆடுகின்ற இறைவியும்,

  • வரி 4

    முன்னதாகவே வந்து இறைவனோடு சேர்ந்து தலை உச்சியிலுள்ள சகஸ்ரதளத்தில் வீற்றிருப்பாள்.

திருமந்திரம் பாடல் #1211

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout