தொடர்ந்து படிக்கread this section continuously
அண்ட முதலாய் அவனி பரியந்தங்கண்டதொன் றில்லை கனங்குழை யல்லதுகண்டனுங் கண்டியு மாகிய காரணங்குண்டிகை கோளிகை கண்டத னாலே.
உரைmeaning
பாடல் #1209 இல் உள்ளபடி, அண்டத்தின் முதல்வியாய் இருக்கும் இறைவியே அண்ட சராசரங்கள் முதல் உலகங்கள் அனைத்திற்கும் ஆதியாகவும் அந்தமாகவும் இருந்து பரிபாலிக்கின்றாள். இவளைத் தவிர வேறொரு சக்தியை யாம் கண்டதில்லை. இருந்தாலும், இறைவி மட்டும் தனியாக நின்று உலகங்கள் அனைத்திற்கும் முதல்வியாக இல்லாமல், சிவப் பரம்பொருளோடு கூடி நின்றே அனைத்திற்கும் முதல்வியாக இருக்கின்றதன் காரணம், உலகங்களில் இருக்கும் அனைத்து உயிர்களும் படைப்புக்கான இயற்கையில் ஆண் பெண் எனும் இரு நிலைகளில் நிற்பதே ஆகும் என இப்பாடல் கூறுகிறது.
As in verse 1209, this verse declares that the Goddess, who is the primal one of the universe, is the origin and the end of the moving and unmoving universe and of all the worlds, and rules and sustains them; we have seen no other power besides her. And yet, the reason the Goddess is not the primal one of all the worlds standing alone by herself, but is the primal one of all only joined together with the Supreme, Shiva, is this: all the lives in the worlds stand, by the very nature of creation, in the two states of male and female.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
பாடல் #1209 இல் உள்ளபடி, அண்டத்தின் முதல்வியாய் இருக்கும் இறைவியே அண்ட சராசரங்கள் முதல் உலகங்கள் அனைத்திற்கும் ஆதியாகவும் அந்தமாகவும் இருந்து பரிபாலிக்கின்றாள்.
As in verse 1209, the Goddess, who is the primal one of the universe, is the origin and the end of the moving and unmoving universe and of all the worlds, and rules and sustains them.
- வரி 2Line 2
இவளைத் தவிர வேறொரு சக்தியை யாம் கண்டதில்லை.
We have seen no other power besides her.
- வரி 3Line 3
இருந்தாலும், இறைவி மட்டும் தனியாக நின்று உலகங்கள் அனைத்திற்கும் முதல்வியாக இல்லாமல், சிவப் பரம்பொருளோடு கூடி நின்றே அனைத்திற்கும் முதல்வியாக இருக்கின்றதன் காரணம்,
And yet, the reason the Goddess is not the primal one of all the worlds standing alone by herself, but is the primal one of all only joined together with the Supreme, Shiva, is this:
- வரி 4Line 4
உலகங்களில் இருக்கும் அனைத்து உயிர்களும் படைப்புக்கான இயற்கையில் ஆண் பெண் எனும் இரு நிலைகளில் நிற்பதே ஆகும் என இப்பாடல் கூறுகிறது.
all the lives in the worlds stand, by the very nature of creation, in the two states of male and female, this verse declares.
திருமந்திரம் பாடல் #1210





