திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1209

நான்காம் தந்திரம்8. ஆதார ஆதேயம்

தொடர்ந்து படிக்கread this section continuously

சூடு மிளம்பிறை சூலி கபாலினிநீடு மிளங்கொடி நின்மலி நேரிழைநாடி நடுவிடை ஞான முருவநின்றாடு மதன்வழி யண்ட முதல்வியே.

உரை

பாடல் #1208 இல் உள்ளபடி, சாதகர்கள் நாடிவந்து திருவடியில் சரணாகதியாகத் தொழுதுநிற்கும்போது அவர்களை ஆட்கொண்டு நிற்கின்ற இறைவியானவள், தன் திருமுடியில் இரு பக்கமும் கூர்மையான முனைகளைக் கொண்ட பிறைச் சந்திரனைச் சூடிக்கொண்டும், தனது திருக்கரத்தில் திரிசூலத்தை ஏந்திக்கொண்டும், திருக்கழுத்தில் மண்டை ஓடுகளை மாலையாக அணிந்துகொண்டும், நீண்டு வளர்ந்து என்றும் இளமையாக இருக்கும் பசுமையான கொடியைப் போலவும், எந்தவிதமான மலங்களும் இல்லாமல் தூய்மையானவளாகவும், அழகிய ஆடை ஆபரணங்களை அணிந்துகொண்டும் வீற்றிருக்கின்றாள். நடுவில் இருக்கும் சுழுமுனை நாடியில் உண்மை ஞானத்தின் சொரூபமாய் நின்று, பாடல் #1207 இல் உள்ளபடி அவள் ஆடுகின்ற திருக்கூத்தின் அசைவுகளுக்கு ஏற்ப அண்ட சராசரங்களையும் ஆட்டிவைத்து, அனைத்திற்கும் முதல்வியாக இருக்கின்றாள் என இப்பாடல் கூறுகிறது.

வரி வாரியாக

  • வரி 1

    பாடல் #1208 இல் உள்ளபடி, சாதகர்கள் நாடிவந்து திருவடியில் சரணாகதியாகத் தொழுதுநிற்கும்போது அவர்களை ஆட்கொண்டு நிற்கின்ற இறைவியானவள், தன் திருமுடியில் இரு பக்கமும் கூர்மையான முனைகளைக் கொண்ட பிறைச் சந்திரனைச் சூடிக்கொண்டும், தனது திருக்கரத்தில் திரிசூலத்தை ஏந்திக்கொண்டும், திருக்கழுத்தில் மண்டை ஓடுகளை மாலையாக அணிந்துகொண்டும் இருக்கின்றாள்.

  • வரி 2

    நீண்டு வளர்ந்து என்றும் இளமையாக இருக்கும் பசுமையான கொடியைப் போலவும், எந்தவிதமான மலங்களும் இல்லாமல் தூய்மையானவளாகவும், அழகிய ஆடை ஆபரணங்களை அணிந்துகொண்டும் வீற்றிருக்கின்றாள்.

  • வரி 3

    நடுவில் இருக்கும் சுழுமுனை நாடியில் உண்மை ஞானத்தின் சொரூபமாய் நின்றுகொண்டு,

  • வரி 4

    பாடல் #1207 இல் உள்ளபடி அவள் ஆடுகின்ற திருக்கூத்தின் அசைவுகளுக்கு ஏற்ப அண்ட சராசரங்களையும் ஆட்டிவைத்து, அனைத்திற்கும் முதல்வியாக இருக்கின்றாள் என இப்பாடல் கூறுகிறது.

திருமந்திரம் பாடல் #1209

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout