தொடர்ந்து படிக்கread this section continuously
ஆமயன் மாலர னீசன் சதாசிவன்தாமடி சூடிநின் றெய்தினர் தம்பதங்காமனுஞ் சாம னிரவி கனலுடன்சோமனும் வந்தடி சூடநின் றாளே.
உரைmeaning
பாடல் #1207 இல் உள்ளபடி, அம்பலமாக ஆகிவிட்ட சாதகருக்குள் திருநடனம் புரிகின்ற நடராஜ உருவத் தத்துவத்தில் இயங்கிக்கொண்டிருக்கின்ற பிரம்மன், திருமால், உருத்திரன், மகேஸ்வரன், சதாசிவன் ஆகிய ஐந்து தேவர்களையும் தமக்குள் உணர்ந்து அவர்களின் திருவடிகளைத் தொழுதுநின்று, சாதகர் அவர்களின் திருவடிப் பேற்றை அடைந்தார். அவ்வாறு அடைந்தபின், சாதகருக்குள் தூமாயையாக இருக்கும் காமனாகிய ஆசையும் புதனாகிய பற்றுக்களும், சாதகர் சமாதி நிலையை அடைவதற்கு உதவுகின்ற சூரிய மண்டலம், மூலாதார அக்னி, சந்திர மண்டலம் ஆகிய மூன்று அங்கங்களும் சேர்ந்து இறைவியை நாடிவந்து, அவளின் திருவடியில் சரணாகதியாகத் தொழுதுநிற்கும்போது, இறைவி அவர்களை ஆட்கொண்டு வீற்றிருந்தாள் என இப்பாடல் கூறுகிறது.
As in verse 1207, this verse declares that the seeker who realizes within himself the five deities, Brahma, Vishnu, Rudra, Maheshwara and Sadasiva, at work within the Nataraja-form principle performing the sacred dance within his heart now become the sanctum, and bows at their feet, attains the state their feet bestow. Having attained it, the desire that is Kama, deluding him, the attachments that are Budhan, and the three parts, the sun mandala, the muladhara fire and the moon mandala, that help the seeker reach the state of samadhi, together seek the Goddess and stand in surrender bowing at her sacred feet; and the Goddess dwells there, having taken them under her rule.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
பாடல் #1207 இல் உள்ளபடி, அம்பலமாக ஆகிவிட்ட சாதகருக்குள் திருநடனம் புரிகின்ற நடராஜ உருவத் தத்துவத்தில் இயங்கிக்கொண்டிருக்கின்ற பிரம்மன், திருமால், உருத்திரன், மகேஸ்வரன், சதாசிவன் ஆகிய ஐந்து தேவர்களையும் தமக்குள் உணர்ந்து,
As in verse 1207, the seeker who realizes within himself the five deities, Brahma, Vishnu, Rudra, Maheshwara and Sadasiva, at work within the Nataraja-form principle performing the sacred dance within his heart now become the sanctum,
- வரி 2Line 2
அவர்களின் திருவடிகளைத் தொழுதுநின்று, சாதகர் அவர்களின் திருவடிப் பேற்றை அடைந்தார்.
and bows at their feet, attains the state their feet bestow.
- வரி 3Line 3
அவ்வாறு அடைந்தபின், சாதகருக்குள் தூமாயையாக இருக்கும் காமனாகிய ஆசையும் புதனாகிய பற்றுக்களும், சாதகர் சமாதி நிலையை அடைவதற்கு உதவுகின்ற சூரிய மண்டலம், மூலாதார அக்னி, சந்திர மண்டலம் ஆகிய மூன்று அங்கங்களும்,
Having attained it, the desire that is Kama, deluding him, the attachments that are Budhan, and the three parts, the sun mandala, the muladhara fire and the moon mandala, that help the seeker reach the state of samadhi,
- வரி 4Line 4
சேர்ந்து இறைவியை நாடிவந்து, அவளின் திருவடியில் சரணாகதியாகத் தொழுதுநிற்கும்போது, இறைவி அவர்களை ஆட்கொண்டு வீற்றிருந்தாள் என இப்பாடல் கூறுகிறது.
together seek the Goddess and stand in surrender bowing at her sacred feet, this verse declares, and the Goddess dwells there, having taken them under her rule.
திருமந்திரம் பாடல் #1208





