தொடர்ந்து படிக்கread this section continuously
சூடிடு மங்குச பாசத் துளைவழிகூடு மிருவளை கோலக்கைக் குண்டிகைநாடு மிருபத நன்னெடு ருத்திரம்ஆடிடு சீர்புனை யாடக மாமே.
உரைmeaning
பாடல் #1206 இல் உள்ளபடி, சந்திர மண்டலத்தில் நறுமணம் வீசுகின்ற மலர்களைச் சூடிக்கொண்டிருக்கின்ற இறைவியானவள், தனது கைகளில் ஆணவத்தை அடக்குகின்ற அங்குசத்தையும் உயிர்களின் பிணைப்பாகிய பாசக் கயிற்றையும் வைத்துக்கொண்டு, சுழுமுனை நாட வழியே சென்று அடைகின்ற இடமாக வீற்றிருக்கின்றாள். இரண்டு கைகளிலும் வளைகள் அணிந்த பேரழகு வாய்ந்த அவளது திருக்கரங்களில் உடுக்கையையும் நெருப்புச் சட்டியையும் வைத்துக்கொண்டு, சாதகர்கள் நாடுகின்ற இறைவன் இறைவி எனும் இரண்டு திருவடிகளைக் கொண்டு, நன்மையின் வடிவமாக மூலாதாரத்திலிருந்து சகஸ்ரதளம் வரை நீண்டிருக்கும் சுழுமுனை நாடியில் உருத்திர நடராஜ வடிவமாக நின்று திருநடனம் புரிந்துகொண்டிருக்கின்றாள். சீரும் சிறப்பும் மிக்க அவளோடு சாதகர்கள் ஒன்று சேர்ந்துவிட்டால், அவரது உள்ளமே இறைவனும் இறைவியும் சேர்ந்து நடராஜ உருவமாகத் திருநடனம் புரிகின்ற அம்பலமாக மாறிவிடும் என இப்பாடல் கூறுகிறது.
As in verse 1206, this verse declares that the Goddess, who stands adorned with fragrant flowers in the moon mandala, holds in her hands the ankusha that subdues pride and the pasha, the binding noose of souls, and dwells as the place reached by travelling the path of the sushumna nadi. In her sacred hands, beautiful with bangles on both wrists, she holds the damaru drum and the fire-pot, and, bearing the two sacred feet, of the Lord and the Goddess, that seekers seek, she stands in the sushumna nadi that stretches, the very form of grace, from the muladhara to the sahasradalam, and performs the sacred dance as Rudra Nataraja. If seekers become united with her, glorious and exalted as she is, their own heart itself turns into the very sanctum where the Lord and the Goddess together perform the sacred dance in the form of Nataraja.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
பாடல் #1206 இல் உள்ளபடி, சந்திர மண்டலத்தில் நறுமணம் வீசுகின்ற மலர்களைச் சூடிக்கொண்டிருக்கின்ற இறைவியானவள், தனது கைகளில் ஆணவத்தை அடக்குகின்ற அங்குசத்தையும் உயிர்களின் பிணைப்பாகிய பாசக் கயிற்றையும் வைத்துக்கொண்டு, சுழுமுனை நாட வழியே சென்று அடைகின்ற இடமாக வீற்றிருக்கின்றாள்.
As in verse 1206, the Goddess who stands adorned with fragrant flowers in the moon mandala holds in her hands the ankusha that subdues pride and the pasha, the binding noose of souls, and dwells as the place reached by travelling the path of the sushumna nadi.
- வரி 2Line 2
இரண்டு கைகளிலும் வளைகள் அணிந்த பேரழகு வாய்ந்த அவளது திருக்கரங்களில் உடுக்கையையும் நெருப்புச் சட்டியையும் வைத்துக்கொண்டிருக்கின்றாள்.
In her sacred hands, beautiful with bangles on both wrists, she holds the damaru drum and the fire-pot.
- வரி 3Line 3
சாதகர்கள் நாடுகின்ற இறைவன் இறைவி எனும் இரண்டு திருவடிகளைக் கொண்டு, நன்மையின் வடிவமாக மூலாதாரத்திலிருந்து சகஸ்ரதளம் வரை நீண்டிருக்கும் சுழுமுனை நாடியில் உருத்திர நடராஜ வடிவமாக நின்று திருநடனம் புரிந்துகொண்டிருக்கின்றாள்.
Bearing the two sacred feet, of the Lord and the Goddess, that seekers seek, she stands in the sushumna nadi that stretches, the very form of grace, from the muladhara to the sahasradalam, and performs the sacred dance as Rudra Nataraja.
- வரி 4Line 4
சீரும் சிறப்பும் மிக்க அவளோடு சாதகர்கள் ஒன்று சேர்ந்துவிட்டால், அவரது உள்ளமே இறைவனும் இறைவியும் சேர்ந்து நடராஜ உருவமாகத் திருநடனம் புரிகின்ற அம்பலமாக மாறிவிடும் என இப்பாடல் கூறுகிறது.
If seekers become united with her, glorious and exalted as she is, this verse declares, their own heart itself turns into the very sanctum where the Lord and the Goddess together perform the sacred dance in the form of Nataraja.
திருமந்திரம் பாடல் #1207





