திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1205

நான்காம் தந்திரம்8. ஆதார ஆதேயம்

தொடர்ந்து படிக்கread this section continuously

கருத்துறுங் காலம் கருது மனமும்திருத்தி யிருந்தவை சேரு நிலத்துஒருத்தியை யுன்னி யுணர்ந்திடு மண்மேல்இருத்திடு மெண்குண மெய்தலு மாமே.

உரை

பாடல் #1204 இல் உள்ளபடி, சாதகரின் மாயையான எண்ணங்கள் நீங்கி இறைவியின் எண்ணமும் தமது எண்ணமும் வேறில்லை எனும் நிலை பெறும்போது, அந்த ஒன்றுபட்ட எண்ணத்தில் வீற்றிருக்கும் இறைவியை மனதிலும் வைத்து வேறு எதிலும் செல்லாமல் தடுத்து நிறுத்தி தியானத்தில் வீற்றிருந்து, எண்ணமும் மனமும் பாடல் #1201 இல் உள்ளபடி சாதகருக்குள் ஒரே இடமாக்கி, அதிலிருந்து உருவாகும் மேல்நிலையான இறைவியை ஒருமுகமாக எண்ணித் தியானித்தால், இந்தப் பிறவியிலேயே மேல்நிலையான இறைவியிடமிருந்து பெறக்கூடிய சித்திகளைச் சாதகரால் பெற்றுக்கொள்ள முடியும் என இப்பாடல் கூறுகிறது.

வரி வாரியாக

  • வரி 1

    பாடல் #1204 இல் உள்ளபடி, சாதகரின் மாயையான எண்ணங்கள் நீங்கி இறைவியின் எண்ணமும் தமது எண்ணமும் வேறில்லை எனும் நிலை பெறும்போது,

  • வரி 2

    அந்த ஒன்றுபட்ட எண்ணத்தில் வீற்றிருக்கும் இறைவியை மனதிலும் வைத்து வேறு எதிலும் செல்லாமல் தடுத்து நிறுத்தி தியானத்தில் வீற்றிருந்து,

  • வரி 3

    எண்ணமும் மனமும் பாடல் #1201 இல் உள்ளபடி சாதகருக்குள் ஒரே இடமாக்கி, அதிலிருந்து உருவாகும் மேல்நிலையான இறைவியை ஒருமுகமாக எண்ணித் தியானித்தால்,

  • வரி 4

    இந்தப் பிறவியிலேயே மேல்நிலையான இறைவியிடமிருந்து பெறக்கூடிய சித்திகளைச் சாதகரால் பெற்றுக்கொள்ள முடியும் என இப்பாடல் கூறுகிறது.

திருமந்திரம் பாடல் #1205

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout