திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1204

நான்காம் தந்திரம்8. ஆதார ஆதேயம்

தொடர்ந்து படிக்கread this section continuously

எய்திட லாகு மிருவினை யின்பயன்கொய்தளிர் மேனிக் குமரி குலாங்கன்னிமைதவழ் கண்ணிநன் மாதுரி கையொடுகைதவ மின்றி கருத்துறும் வாறே.

உரை

பாடல் #1203 இல் உள்ளபடி, ஒரு கண நேரத்தில் இறைவனையும் அவனது அம்சமான வேதங்களையும் உணர்ந்துகொண்ட சாதகர்கள், தங்களின் நல்வினை தீவினை ஆகிய இரண்டு விதமான வினைகளையும் நீங்கப்பெற்று, பார்த்தவுடன் கொய்ய நினைக்கும் அழகிய குருத்து இலைகளைக் கொண்ட இளங்கொடி போன்ற திருமேனியை உடையவளும், கன்னித் தன்மையோடு இருக்கும் பேரின்ப அமிழ்தத்தைக் கொடுக்கும் அழகிய திருமுலைகளைக் கொண்டு என்றும் இளமையாக இருப்பவளும், கருமையான மையைத் தீட்டியிருக்கும் பேரழகுடன் அருளுகின்ற கண்களை உடையவளும், நன்மையான இனிமையைக் கொடுக்கின்ற திருக்கரங்களை உடையவளுமான இறைவியின் எண்ணங்களும் தமது எண்ணங்களும் ஒன்றாகப் பெற்று, மாய எண்ணங்கள் எதுவும் இன்றி இருக்கும் வழியை அடைந்துவிடுவார்கள் என இப்பாடல் கூறுகிறது.

வரி வாரியாக

  • வரி 1

    பாடல் #1203 இல் உள்ளபடி, ஒரு கண நேரத்தில் இறைவனையும் அவனது அம்சமான வேதங்களையும் உணர்ந்துகொண்ட சாதகர்கள், தங்களின் நல்வினை தீவினை ஆகிய இரண்டு விதமான வினைகளையும் நீங்கப்பெறுவார்கள்.

  • வரி 2

    பார்த்தவுடன் கொய்ய நினைக்கும் அழகிய குருத்து இலைகளைக் கொண்ட இளங்கொடி போன்ற திருமேனியை உடையவளும், கன்னித் தன்மையோடு இருக்கும் பேரின்ப அமிழ்தத்தைக் கொடுக்கும் அழகிய திருமுலைகளைக் கொண்டு என்றும் இளமையாக இருப்பவளுமான இறைவியின்,

  • வரி 3

    கருமையான மையைத் தீட்டியிருக்கும் பேரழகுடன் அருளுகின்ற கண்களை உடையவளும், நன்மையான இனிமையைக் கொடுக்கின்ற திருக்கரங்களை உடையவளுமான அவளின்,

  • வரி 4

    எண்ணங்களும் தமது எண்ணங்களும் ஒன்றாகப் பெற்று, மாய எண்ணங்கள் எதுவும் இன்றி இருக்கும் வழியை அடைந்துவிடுவார்கள் என இப்பாடல் கூறுகிறது.

திருமந்திரம் பாடல் #1204

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout