தொடர்ந்து படிக்கread this section continuously
உறைபதி தோறும் முறைமுறை மேவிநறைகமழ் கோதையை நாடொறு நண்ணிமறையுட னேநிற்கும் மற்றுள்ள நான்கும்இறைதினைப் போதிடி லெய்திட லாமே.
உரைmeaning
பாடல் #1202 இல் உள்ளபடி, இறைவி தமக்கும் மிகவும் விருப்பமான கோயிலாகக் கொண்டிருக்கும் சாதகருடன் தொடர்ந்து பலகாலம் முறைப்படி அவரது தன்மையிலேயே கலந்து நிற்கின்ற இறைவியானவள், நறுமணம் கமழ்கின்ற மலர்களைச் சூடியிருக்கும் பேரழகு வாய்ந்த கூந்தலை உடையவளாக, அவருக்குள்ளிருந்து எப்போதும் நறுமணம் வீசிக்கொண்டு சேர்ந்தே இருக்கின்றாள். இப்படி இருக்கின்ற இறைவியோடு சமாதி நிலையில் பலகாலம் இருந்தால், இறைவனுடன் அவனது அம்சமாகவும் அவனுக்குச் சரிசமமாகவும் இருக்கின்ற நான்கு வேதங்களையும் இறைவனின் உண்மை ஞானத்தையும் ஒரு கணநேரத்தில் பெற்று உணர்ந்துவிடலாம் என இப்பாடல் கூறுகிறது.
As in verse 1202, this verse declares that the Goddess, who dwells continually, in due order, over a long time merged in the very nature of the seeker whose body she holds as her most cherished temple, is one whose surpassingly beautiful hair is adorned with fragrant flowers, and who forever diffuses that fragrance from within the seeker as she abides there together with him. If one remains with this Goddess in the state of samadhi over a long time, one can, in a single instant, receive and realize the four Vedas, which are an aspect of the Lord and equal to him, and the Lord's own true wisdom.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
பாடல் #1202 இல் உள்ளபடி, இறைவி தமக்கும் மிகவும் விருப்பமான கோயிலாகக் கொண்டிருக்கும் சாதகருடன் தொடர்ந்து பலகாலம் முறைப்படி அவரது தன்மையிலேயே கலந்து நிற்கின்றாள்.
As in verse 1202, the Goddess dwells continually, in due order, over a long time merged in the very nature of the seeker whose body she holds as her most cherished temple.
- வரி 2Line 2
நறுமணம் கமழ்கின்ற மலர்களைச் சூடியிருக்கும் பேரழகு வாய்ந்த கூந்தலை உடையவளாக, அவருக்குள்ளிருந்து எப்போதும் நறுமணம் வீசிக்கொண்டு சேர்ந்தே இருக்கின்றாள்.
She is one whose surpassingly beautiful hair is adorned with fragrant flowers, and who forever diffuses that fragrance from within the seeker as she abides there together with him.
- வரி 3Line 3
இப்படி இருக்கின்ற இறைவியோடு சமாதி நிலையில் பலகாலம் இருந்தால், இறைவனுடன் அவனது அம்சமாகவும் அவனுக்குச் சரிசமமாகவும் இருக்கின்ற நான்கு வேதங்களையும்,
If one remains with this Goddess in the state of samadhi over a long time, one comes to know the four Vedas, which are an aspect of the Lord and equal to him,
- வரி 4Line 4
இறைவனின் உண்மை ஞானத்தையும் ஒரு கணநேரத்தில் பெற்று உணர்ந்துவிடலாம் என இப்பாடல் கூறுகிறது.
and, in a single instant, receive and realize the Lord's own true wisdom, this verse declares.
திருமந்திரம் பாடல் #1203





