தொடர்ந்து படிக்கread this section continuously
சமாதிசெய் வார்கட்குத் தான்முத லாகிச்சிவாதியி லாருஞ் சிலைநுத லாளைநவாதியி லாக நயந்தது வோதில்உவாதி யவளுக் குறைவில தாமே.
உரைmeaning
பாடல் #1201 இல் உள்ளபடி, இறைவியின் திருவடிகளையே தியானித்துச் சமாதி நிலையில் வீற்றிருக்கும் சாதகர்களுக்கு, ஆதியிலிருந்தே இறைவனோடு சேர்ந்திருக்கின்றவளும், வில் போல் வளைந்த நெற்றியைக் கொண்டவளுமான இறைவியே தலைவியாக வீற்றிருந்து, பாடல் #871 இல் உள்ளபடி சாதகருக்குள் இருக்கும் ஒன்பது மண்டலங்களுக்கும் முதன்மை சக்தியாக விளங்குகின்றாள். அவளது கருணையால், பாடல் #1193 இல் உள்ளபடி அவருக்குள்ளிருந்து எழுந்த மந்திரம் தானாகவே ஒன்பது மண்டலங்களுக்கும் எப்போதும் ஓடிக்கொண்டே இருக்கும்படி செய்து, சாதகரின் உடலையே தமக்கு மிகவும் விருப்பமான கோயிலாகக் கொண்டு வீற்றிருக்கின்றாள் என இப்பாடல் கூறுகிறது.
As in verse 1201, this verse declares that for seekers who meditate upon the Goddess's sacred feet alone and stand established in samadhi, the Goddess herself, who has been together with the Lord from the very beginning and who bears a brow curved like a bow, dwells as their mistress and, as in verse 871, shines as the foremost power over the nine mandalas within the seeker. Through her grace, she causes the mantra that, as in verse 1193, arose from within the seeker to run of itself continually through all nine mandalas, and dwells taking the seeker's very body as the temple most dear to her.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
பாடல் #1201 இல் உள்ளபடி, இறைவியின் திருவடிகளையே தியானித்துச் சமாதி நிலையில் வீற்றிருக்கும் சாதகர்களுக்கு,
As in verse 1201, for seekers who meditate upon the Goddess's sacred feet alone and stand established in samadhi,
- வரி 2Line 2
ஆதியிலிருந்தே இறைவனோடு சேர்ந்திருக்கின்றவளும், வில் போல் வளைந்த நெற்றியைக் கொண்டவளுமான இறைவியே தலைவியாக வீற்றிருக்கின்றாள்.
the Goddess herself, who has been together with the Lord from the very beginning and who bears a brow curved like a bow, dwells as their mistress.
- வரி 3Line 3
பாடல் #871 இல் உள்ளபடி சாதகருக்குள் இருக்கும் ஒன்பது மண்டலங்களுக்கும் முதன்மை சக்தியாக விளங்கி, அவளது கருணையால் பாடல் #1193 இல் உள்ளபடி அவருக்குள்ளிருந்து எழுந்த மந்திரம் தானாகவே ஒன்பது மண்டலங்களுக்கும் எப்போதும் ஓடிக்கொண்டே இருக்கும்படி செய்கின்றாள்.
As in verse 871, she shines as the foremost power over the nine mandalas within the seeker, and through her grace causes the mantra that, as in verse 1193, arose from within the seeker to run of itself continually through all nine mandalas.
- வரி 4Line 4
சாதகரின் உடலையே தமக்கு மிகவும் விருப்பமான கோயிலாகக் கொண்டு வீற்றிருக்கின்றாள் என இப்பாடல் கூறுகிறது.
this verse declares that she dwells taking the seeker's very body as the temple most dear to her.
திருமந்திரம் பாடல் #1202





