திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1201

நான்காம் தந்திரம்8. ஆதார ஆதேயம்

தொடர்ந்து படிக்கread this section continuously

சிந்தையில் வைத்துச் சிராதியி லேவைத்துமுந்தையில் வைத்துத் தம்மூலத்தி லேவைத்துநிந்தையில் வையா நினைவதி லேவைத்துச்சந்தியில் வைத்துச் சமாதிசெய் வீரே.

உரை

பாடல் #1200 இல் இறைவி தமது சிந்தையில் வைத்து அருளிய திருவடிகளை, சாதகர்கள் தமது தலைக்கு உச்சியில் இருக்கும் சகஸ்ரதளத்திலும், சகஸ்ரதளத்திற்கு முன்பு இருக்கின்ற ஆதார சக்கரங்களிலும், இறுதியில் இருக்கின்ற மூலாதாரத்திலும் வைத்து, தம்மைச் சுற்றி இருக்கும் உலகத்தில் மாயையால் நடக்கும் நன்மை தீமைகளில் எண்ணங்களைப் போக விடாமல், இறைவனைப் பற்றி மட்டுமே எண்ணுகின்ற எண்ணங்களில் இறைவியின் திருவடிகளை வைத்து, பிறகு அனைத்திலும் வைத்த இறைவியின் திருவடிகளை ஒருமுகமாக ஒரே இடமாக்கி வைத்து சமாதி நிலையில் தியானிக்க வேண்டும் என இப்பாடல் சாதகர்களுக்குக் கூறுகிறது.

வரி வாரியாக

  • வரி 1

    பாடல் #1200 இல் இறைவி தமது சிந்தையில் வைத்து அருளிய திருவடிகளை, சாதகர்கள் தமது தலைக்கு உச்சியில் இருக்கும் சகஸ்ரதளத்திலும் வைத்து,

  • வரி 2

    சகஸ்ரதளத்திற்கு முன்பு இருக்கின்ற ஆதார சக்கரங்களிலும், இறுதியில் இருக்கின்ற மூலாதாரத்திலும் வைத்து,

  • வரி 3

    தம்மைச் சுற்றி இருக்கும் உலகத்தில் மாயையால் நடக்கும் நன்மை தீமைகளில் எண்ணங்களைப் போக விடாமல், இறைவனைப் பற்றி மட்டுமே எண்ணுகின்ற எண்ணங்களில் இறைவியின் திருவடிகளை வைத்து,

  • வரி 4

    பிறகு அனைத்திலும் வைத்த இறைவியின் திருவடிகளை ஒருமுகமாக ஒரே இடமாக்கி வைத்து சமாதி நிலையில் தியானிக்க வேண்டும் என இப்பாடல் கூறுகிறது.

திருமந்திரம் பாடல் #1201

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout