திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1200

நான்காம் தந்திரம்8. ஆதார ஆதேயம்

தொடர்ந்து படிக்கread this section continuously

ஆரே திருவின் திருவடி காண்பர்கள்நேரே நின்றோதி நினையவும் வல்லார்க்குக்காரேர் குழலி கமல மலரன்னசீரேயுஞ் சேவடி சிந்தைவைத் தாளே.

உரை

இறைவியின் திருவடியை யாரால் தரிசிக்க முடியும் என்று பார்த்தால், இறைவனை அடைய வேண்டும் என்ற எண்ணத்தில் உறுதியாகத் தியானத்தில் வீற்றிருந்து, பாடல் #1193 இல் உள்ளபடி தமக்குள்ளிருந்து கிடைத்த மந்திரத்தை ஓதிக்கொண்டே இருக்க முடிந்தவர்களுக்குக் கிடைக்கும் பேறாகும். இப்படிச் சாதகம் செய்பவர்களுக்கு, மழை பொழியும் மேகங்களைப் போலக் கருமையான நிறத்தில் பேரழகு பொருந்திய கூந்தலை உடைய இறைவியானவள், தனது தாமரை மலர் போன்ற சீரும் சிறப்பும் வாய்ந்த மேன்மை மிக்க திருவடிகளை அவர்களது சிந்தையில் வைத்து அருளுவாள் என இப்பாடல் கூறுகிறது.

வரி வாரியாக

  • வரி 1

    இறைவியின் திருவடியை யாரால் தரிசிக்க முடியும் என்று பார்த்தால்,

  • வரி 2

    இறைவனை அடைய வேண்டும் என்ற எண்ணத்தில் உறுதியாகத் தியானத்தில் வீற்றிருந்து, பாடல் #1193 இல் உள்ளபடி தமக்குள்ளிருந்து கிடைத்த மந்திரத்தை ஓதிக்கொண்டே இருக்க முடிந்தவர்களுக்குக் கிடைக்கும் பேறாகும் என இப்பாடல் கூறுகிறது.

  • வரி 3

    இப்படிச் சாதகம் செய்பவர்களுக்கு, மழை பொழியும் மேகங்களைப் போலக் கருமையான நிறத்தில் பேரழகு பொருந்திய கூந்தலை உடைய இறைவியானவள்,

  • வரி 4

    தனது தாமரை மலர் போன்ற சீரும் சிறப்பும் வாய்ந்த மேன்மை மிக்க திருவடிகளை அவர்களது சிந்தையில் வைத்து அருளுவாள்.

திருமந்திரம் பாடல் #1200

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout