திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1199

நான்காம் தந்திரம்8. ஆதார ஆதேயம்

தொடர்ந்து படிக்கread this section continuously

சத்தியென் பாளொரு சாதகப் பெண்பிள்ளைமுத்திக்கு நாயகி யென்ப தறிகிலர்பத்தியைப் பாழி லுகுத்தஅப் பாவிகள்கத்திய நாய்போல் கதறுகின் றாரே.

உரை

பாடல் #1198 இல் உள்ளபடி, சாதகம் செய்பவர்களின் உள்ளுக்குள் வீற்றிருக்கும் இறைவியானவள், சாதகம் செய்வதன் மூலமே அறிந்துகொள்ளக்கூடிய ஆரம்ப நிலையில் பெண் தெய்வமாக இருக்கின்றாள். இவளே முக்தியை அருளுகின்ற தலைவி என்பதை அறியாமல் பலர் இருக்கின்றனர். இப்படி இருப்பவர்களே அடியவர்கள் இறைவியின்மேல் வைக்கும் பக்தியை அறிந்துகொள்ளாமல் இழிவாகப் பேசி ஏளனம் செய்து பாவிகளாக இருக்கின்றனர். இந்தப் பாவிகள், தன்னால் புரிந்துகொள்ள முடியாததைப் பார்த்துக் குரைக்கின்ற நாயைப் போலவே, இறைவியை அறிந்துகொள்ளாமல் பிதற்றிக் கொண்டிருக்கின்றார்கள் என இப்பாடல் கூறுகிறது.

வரி வாரியாக

  • வரி 1

    பாடல் #1198 இல் உள்ளபடி, சாதகம் செய்பவர்களின் உள்ளுக்குள் வீற்றிருக்கும் இறைவியானவள், சாதகம் செய்வதன் மூலமே அறிந்துகொள்ளக்கூடிய ஆரம்ப நிலையில் பெண் தெய்வமாக இருக்கின்றாள்.

  • வரி 2

    இவளே முக்தியை அருளுகின்ற தலைவி என்பதை அறியாமல் பலர் இருக்கின்றனர்.

  • வரி 3

    இப்படி இருப்பவர்களே அடியவர்கள் இறைவியின்மேல் வைக்கும் பக்தியை அறிந்துகொள்ளாமல் இழிவாகப் பேசி ஏளனம் செய்து பாவிகளாக இருக்கின்றனர்.

  • வரி 4

    இந்தப் பாவிகள், தன்னால் புரிந்துகொள்ள முடியாததைப் பார்த்துக் குரைக்கின்ற நாயைப் போலவே, இறைவியை அறிந்துகொள்ளாமல் பிதற்றிக் கொண்டிருக்கின்றார்கள் என இப்பாடல் கூறுகிறது.

திருமந்திரம் பாடல் #1199

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout