திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1198

நான்காம் தந்திரம்8. ஆதார ஆதேயம்

தொடர்ந்து படிக்கread this section continuously

ஏந்திழை யாளு மிறைவர்கள் மூவரும்காந்தார மாறுங் கலைமுத லீரெட்டும்ஆந்த குளத்தியு மந்திர ராயுவுஞ்சார்ந்தன ரேத்த விருந்தனள் சத்தியே.

உரை

பாடல் #1197 இல் உள்ளபடி, அழகிய ஆபரணங்களை அணிந்து ஆறு ஆதார சக்கரங்களுக்கும் சக்தியளிக்கின்ற இறைவியானவள், மும்மூர்த்திகளாகிய பிரம்மன், திருமால், உருத்திரன் ஆகியோருடைய சக்தியாகவும், ஆறு ஆதாரச் சக்கரங்களிலும் வீசுகின்ற ஒளியாகவும், பதினாறு கலைகளின் மூலம் பதினாறு விதமான செயல்களைப் புரிந்துகொண்டிருப்பவளுமாகிய இறைவியை, தமது எண்ணங்கள் முழுவதும் வைத்து தியானிப்பவர்களும், வேத மந்திரங்களை ஆராய்ந்து இறைவியைத் தெரிந்துகொள்ள முயல்கின்றவர்களும், இறைவியே சரணம் என்று அவளை மட்டுமே சார்ந்து போற்றி வழிபடுபவர்களும் ஆகிய அடியவர்களுக்குள் வீற்றிருக்கின்றாள் என இப்பாடல் கூறுகிறது.

வரி வாரியாக

  • வரி 1

    பாடல் #1197 இல் உள்ளபடி, அழகிய ஆபரணங்களை அணிந்து ஆறு ஆதார சக்கரங்களுக்கும் சக்தியளிக்கின்ற இறைவியானவள் மும்மூர்த்திகளாகிய பிரம்மன், திருமால், உருத்திரன் ஆகியோருடைய சக்தியாக இருக்கின்றாள்.

  • வரி 2

    ஆறு ஆதாரச் சக்கரங்களிலும் வீசுகின்ற ஒளியாகவும், பதினாறு கலைகளின் மூலம் பதினாறு விதமான செயல்களைப் புரிந்துகொண்டிருப்பவளுமாக இருக்கின்றாள்.

  • வரி 3

    இப்படிப்பட்ட இறைவியை தமது எண்ணங்கள் முழுவதும் வைத்து தியானிப்பவர்களும், வேத மந்திரங்களை ஆராய்ந்து இறைவியைத் தெரிந்துகொள்ள முயல்கின்றவர்களும்,

  • வரி 4

    இறைவியே சரணம் என்று அவளை மட்டுமே சார்ந்து போற்றி வழிபடுபவர்களும் ஆகிய அடியவர்களுக்குள் அவள் வீற்றிருக்கின்றாள் என இப்பாடல் கூறுகிறது.

திருமந்திரம் பாடல் #1198

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout