திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1197

நான்காம் தந்திரம்8. ஆதார ஆதேயம்

தொடர்ந்து படிக்கread this section continuously

கொடியதி ரேகை குறியுள் இருப்பப்படியது வாருணைப் பைங்கழ லீசன்வடிவது வானந்தம் வந்து முறையேஇடுமுத லாறங்க மேந்திழை யாளே.

உரை

பாடல் #1196 இல் உள்ளபடி, விசுத்திச் சக்கரத்திலிருந்து கொடி போல் மேலேறிச் சென்று சகஸ்ரதளத்தில் உச்ச நிலையில் மின்னல் போன்ற ஒளியையும் சக்தியையும் கொண்டிருக்கும் இறைவியானவள், அங்கிருக்கும் இறை சக்தியையே முதன்மையாகக் கொண்டு அதனுள் வீற்றிருக்கும் போது, அங்கிருந்து கங்கையைப் போன்ற அமிழ்தம் கீழிறங்கும்படி இறை சக்தியானது ஊற்றாகப் பொழிகின்றது. பசுமையான பொன் போன்ற திருவடிகளைக் கொண்ட இறைவனின் இந்த உருவமே பேரின்பமாகும். இந்தப் பேரின்பத்தை அருளும் அமிழ்தத்தை, சாதகரின் பக்குவத்திற்கு ஏற்றபடி அவருக்குள் இருக்கும் ஆறு ஆதார சக்கரங்களுக்கும் முறையாக அருளுகின்ற தலைவியாக, அழகிய ஆபரணங்களை அணிந்திருக்கும் இறைவி இருக்கின்றாள் என இப்பாடல் கூறுகிறது.

வரி வாரியாக

  • வரி 1

    பாடல் #1196 இல் உள்ளபடி, விசுத்திச் சக்கரத்திலிருந்து கொடி போல் மேலேறிச் சென்று சகஸ்ரதளத்தில் உச்ச நிலையில் மின்னல் போன்ற ஒளியையும் சக்தியையும் கொண்டிருக்கும் இறைவியானவள்,

  • வரி 2

    அங்கிருக்கும் இறை சக்தியையே முதன்மையாகக் கொண்டு அதனுள் வீற்றிருக்கும் போது, அங்கிருந்து கங்கையைப் போன்ற அமிழ்தம் கீழிறங்கும்படி இறை சக்தியானது ஊற்றாகப் பொழிகின்றது.

  • வரி 3

    பசுமையான பொன் போன்ற திருவடிகளைக் கொண்ட இறைவனின் இந்த உருவமே பேரின்பமாகும்.

  • வரி 4

    இந்தப் பேரின்பத்தை அருளும் அமிழ்தத்தை, சாதகரின் பக்குவத்திற்கு ஏற்றபடி அவருக்குள் இருக்கும் ஆறு ஆதார சக்கரங்களுக்கும் முறையாக அருளுகின்ற தலைவியாக, அழகிய ஆபரணங்களை அணிந்திருக்கும் இறைவி இருக்கின்றாள் என இப்பாடல் கூறுகிறது.

திருமந்திரம் பாடல் #1197

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout