திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1196

நான்காம் தந்திரம்8. ஆதார ஆதேயம்

தொடர்ந்து படிக்கread this section continuously

உள்ளொளி மூவிரண் டோங்கிய வங்கங்கள்வெள்ளொளி யங்கியின் மேவி யவரொடுங்கள்ளவிழ் கோனைக் கலந்துட னேநிற்கும்கொள்ள விசுத்திக் கொடியமு தாமே.

உரை

பாடல் #1195 இல் உள்ளபடி, சாதகருக்குள் பேரொளியாக வீற்றிருக்கும் இறைவியானவள், தனது சக்தியின் மூலம் சாதகருக்குள் இருக்கும் ஆறு ஆதாரச் சக்கரங்களுக்கும் உயர்ந்த நிலையை அருளி, அவருக்குள் இருக்கும் குண்டலினி சக்தியாகிய அக்னியில் பரவி அதனோடு சேர்ந்து நிற்கின்றாள். தேன் நிறைந்திருக்கும் கொன்றை மலர்களை மாலையாகச் சூடியிருக்கும் அரசனாகிய இறைவனுடன் ஒன்றாகக் கலந்து, இறை சக்தியுடனே சாதகருக்குள் வீற்றிருக்கும் இறைவியானவள், சாதகர் தம்மை உணர்ந்து அனுபவித்துக் கொள்ளும்படி தொண்டைக்கு அருகில் இருக்கும் விசுத்திச் சக்கரத்தில் இருந்து கொடி போல் மேலேறிச் சென்று, தலை உச்சியில் இருக்கும் சகஸ்ரதளத்திலிருந்து அமிழ்தமாகப் பொழிகின்றாள் என இப்பாடல் கூறுகிறது.

வரி வாரியாக

  • வரி 1

    பாடல் #1195 இல் உள்ளபடி, சாதகருக்குள் பேரொளியாக வீற்றிருக்கும் இறைவியானவள் தனது சக்தியின் மூலம் சாதகருக்குள் இருக்கும் ஆறு ஆதாரச் சக்கரங்களுக்கும் உயர்ந்த நிலையை அருளுகின்றாள்.

  • வரி 2

    அவருக்குள் இருக்கும் குண்டலினி சக்தியாகிய அக்னியில் பரவி அதனோடு சேர்ந்து நிற்கின்றாள்.

  • வரி 3

    தேன் நிறைந்திருக்கும் கொன்றை மலர்களை மாலையாகச் சூடியிருக்கும் அரசனாகிய இறைவனுடன் ஒன்றாகக் கலந்து, இறை சக்தியுடனே சாதகருக்குள் வீற்றிருக்கின்றாள்.

  • வரி 4

    சாதகர் தம்மை உணர்ந்து அனுபவித்துக் கொள்ளும்படி தொண்டைக்கு அருகில் இருக்கும் விசுத்திச் சக்கரத்தில் இருந்து கொடி போல் மேலேறிச் சென்று, தலை உச்சியில் இருக்கும் சகஸ்ரதளத்திலிருந்து அமிழ்தமாகப் பொழிகின்றாள் என இப்பாடல் கூறுகிறது.

திருமந்திரம் பாடல் #1196

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout