தொடர்ந்து படிக்கread this section continuously
மேவிய மண்டல மூன்றுடன் கீழெரிதாவிய நற்பதத் தண்மதி யங்கதிர்மூவருங் கூடி முதல்வியாய் முன்நிற்பார்ஓவினு மேவிடு முள்ளொளி யாமே.
உரைmeaning
பாடல் #1194 இல் உள்ளபடி, சாதகரின் உள்ளத்திலும் பரவி வீற்றிருக்கும் இறைவியானவள் அவருக்குள் இருக்கும் மூன்று மண்டலங்களிலும் பேரொளி உருவமாக இருப்பதை இந்தப் பாடலில் அறியலாம். சாதகருக்குள் இருக்கும் மூன்று மண்டலங்களில், அடியில் இருக்கும் அக்னி மண்டலமாகிய மூலாக்னியே இறைவியின் நன்மை தரும் திருவடிகளாகவும், சூரிய மண்டலமே இறைவியின் திருமேனியாகவும், தலை உச்சிக்கு மேலே இருக்கும் துவாதசாந்த வெளியையும் தாண்டி இருக்கும் சந்திர மண்டலமே (பாடல் #1187 இல் உள்ளபடி) இறைவியின் திருமுடியாகவும் கொண்ட பேரொளி உருவமாக இறைவி இருக்கின்றாள். சாதகர் கண்மூடி தியானத்தில் இருந்தாலும், தமக்குள் பேரொளி உருவமாக இறைவி வீற்றிருப்பதை உணர்ந்து தரிசிக்க முடியும் என இப்பாடல் கூறுகிறது.
As in verse 1194, this verse tells us that the Goddess who pervades and dwells throughout the seeker's heart also stands, within the seeker, as a form of great light across the three mandalas. Of the three mandalas within the seeker, the fire mandala at the base, the mulagni, forms the Goddess's beneficent feet; the sun mandala forms her sacred body; and the moon mandala beyond the dvadasantha space above the crown of the head, as in verse 1187, forms her sacred crown; and it is as this form of great light that the Goddess exists. Even while the seeker sits in meditation with eyes closed, this verse declares, the Goddess dwelling within as this form of great light can be realized and beheld.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
பாடல் #1194 இல் உள்ளபடி, சாதகரின் உள்ளத்திலும் பரவி வீற்றிருக்கும் இறைவியானவள் அவருக்குள் இருக்கும் மூன்று மண்டலங்களிலும் பேரொளி உருவமாக இருப்பதை இந்தப் பாடலில் அறியலாம். சாதகருக்குள் இருக்கும் மூன்று மண்டலங்களில், அடியில் இருக்கும் அக்னி மண்டலமாகிய மூலாக்னியே இறைவியின் நன்மை தரும் திருவடிகளாகும்.
As in verse 1194, this verse tells us that the Goddess who pervades the seeker's heart stands, within the seeker, as a form of great light across the three mandalas. Of these three mandalas, the fire mandala at the base, the mulagni, forms her beneficent feet.
- வரி 2Line 2
சூரிய மண்டலமே இறைவியின் திருமேனியாகவும், தலை உச்சிக்கு மேலே இருக்கும் துவாதசாந்த வெளியையும் தாண்டி இருக்கும் சந்திர மண்டலமே (பாடல் #1187 இல் உள்ளபடி) இறைவியின் திருமுடியாகவும் இருக்கின்றன.
The sun mandala forms her sacred body, and the moon mandala beyond the dvadasantha space above the crown of the head, as in verse 1187, forms her sacred crown.
- வரி 3Line 3
இப்படி மூன்று மண்டலங்களும் ஒன்றாகக் கூடி, இறைவி பேரொளி உருவமாக முதல்வியாக நிற்கின்றாள்.
The three mandalas thus come together as one, and it is as this form of great light that the Goddess stands foremost.
- வரி 4Line 4
சாதகர் கண்மூடி தியானத்தில் இருந்தாலும், தமக்குள் பேரொளி உருவமாக இறைவி வீற்றிருப்பதை உணர்ந்து தரிசிக்க முடியும் என இப்பாடல் கூறுகிறது.
Even while the seeker sits in meditation with eyes closed, this verse declares, the Goddess dwelling within as this form of great light can be realized and beheld.
திருமந்திரம் பாடல் #1195





