தொடர்ந்து படிக்கread this section continuously
முத்து வணத்தி முகந்தொறு முக்கண்ணிசத்தி சதிரி சகளி சடாதரிபத்துக் கரத்தி பராபரன் பைந்தொடிவித்தகி யென்னுள்ள மேவிநின் றாளே.
உரைmeaning
பாடல் #1193 இல் உள்ளபடி, மூலாதாரத்திலிருந்து முத்துப் போல் கிடைத்த மந்திரமே இறைவியின் அம்சமாக இருப்பதை இந்தப் பாடலில் அறியலாம். இந்த மந்திரமாகிய இறைவி முத்துப் போன்ற வெண்மை ஒளியாகப் பிரகாசிக்கின்றாள். தனது அனைத்து முகங்களிலும் மூன்று கண்களை வைத்திருக்கின்றாள். சக்தி மயமாக இருக்கின்றாள். அளவில்லாத ஆற்றலைக் கொண்டிருக்கின்றாள். அடியவர் விரும்பும் உருவத்தையே மேற்கொண்டு வருகின்றாள். சடைமுடியை அணிந்திருக்கின்றாள். பத்துக் கைகளைக் கொண்டிருக்கின்றாள். அசையா சக்தியாகிய இறைவனைச் சுற்றியிருக்கும் பொன் வளையலாக இருக்கின்றாள். ஞானத்தின் தலைவியாக இருக்கின்றாள். இந்த இறைவியே எம் உள்ளம் முழுவதும் பரவி வீற்றிருக்கின்றாள் என இப்பாடல் கூறுகிறது.
As in verse 1193, this verse tells us that the mantra obtained like a pearl from the muladhara is itself an aspect of the Goddess. This mantra, who is the Goddess, shines with a whiteness like a pearl. She holds three eyes in every one of her faces. She is made wholly of Shakti. She holds boundless power. She takes on whatever form the devotee desires. She wears matted locks. She has ten arms. She is the golden bangle that encircles the unmoving Shakti who is the Lord. She is the mistress of wisdom. This very Goddess pervades and dwells throughout our heart, this verse declares.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
பாடல் #1193 இல் உள்ளபடி, மூலாதாரத்திலிருந்து முத்துப் போல் கிடைத்த மந்திரமே இறைவியின் அம்சமாக இருப்பதை இந்தப் பாடலில் அறியலாம். இந்த மந்திரமாகிய இறைவி முத்துப் போன்ற வெண்மை ஒளியாகப் பிரகாசிக்கின்றாள். தனது அனைத்து முகங்களிலும் மூன்று கண்களை வைத்திருக்கின்றாள்.
As in verse 1193, this verse tells us that the mantra obtained like a pearl from the muladhara is itself an aspect of the Goddess. This mantra, who is the Goddess, shines with a whiteness like a pearl, and holds three eyes in every one of her faces.
- வரி 2Line 2
சக்தி மயமாக இருக்கின்றாள். அளவில்லாத ஆற்றலைக் கொண்டிருக்கின்றாள். அடியவர் விரும்பும் உருவத்தையே மேற்கொண்டு வருகின்றாள். சடைமுடியை அணிந்திருக்கின்றாள்.
She is made wholly of Shakti. She holds boundless power. She takes on whatever form the devotee desires. She wears matted locks.
- வரி 3Line 3
பத்துக் கைகளைக் கொண்டிருக்கின்றாள். அசையா சக்தியாகிய இறைவனைச் சுற்றியிருக்கும் பொன் வளையலாக இருக்கின்றாள்.
She has ten arms. She is the golden bangle that encircles the unmoving Shakti who is the Lord.
- வரி 4Line 4
ஞானத்தின் தலைவியாக இருக்கின்றாள். இந்த இறைவியே எம் உள்ளம் முழுவதும் பரவி வீற்றிருக்கின்றாள் என இப்பாடல் கூறுகிறது.
She is the mistress of wisdom. This very Goddess pervades and dwells throughout our heart, this verse declares.
திருமந்திரம் பாடல் #1194





