தொடர்ந்து படிக்கread this section continuously
பாலித் திருக்கும் பனிமல ராறினும்ஆலித் திருக்கு மவற்றி னகம்படிசீலத்தை நீக்கத் திகழ்ந்தெழு மந்திரம்மூலத்து மேலது முத்துஅது வாமே.
உரைmeaning
பாடல் #1192 இல் உள்ளபடி, சாதகரின் குண்டலினி சோதியானது சகஸ்ரதளத்தில் இருக்கும் இறைவியோடு சேர்ந்து அடங்கி இருக்கும் போது, இறைவியின் சக்தியானது சாதகருக்குள் இருக்கும் ஆறு ஆதார சக்கரங்களிலும் ஒன்றாகக் கலந்திருக்கும். அப்போது அந்தச் சக்கரங்களின் உள்ளே படிந்திருக்கின்ற இன்பத்தை அனுபவித்துக் கொண்டிருக்கின்ற நிலையிலிருந்து சாதகர் தம்மை நீக்கி விட்டால், அவருக்குள்ளிருந்து பிரகாசமாக ஒரு மந்திரம் மூலாதாரத்திலிருந்து மேலெழும்பி வரும். இந்த மந்திரமே, கடலின் ஆழத்தில் கிடைக்கும் அபூர்வமான முத்து போன்ற மிகப் பெரும் செல்வமாகும் என இப்பாடல் கூறுகிறது.
As in verse 1192, this verse declares that when the seeker's kundalini flame stands merged and at rest with the Goddess at the sahasradalam, the Goddess's power mingles as one with the six adhara chakras within the seeker. When the seeker then withdraws from the state of continually savouring the bliss settled within those chakras, a radiant mantra rises up from within them, from the muladhara. This mantra itself is a very great treasure, like the rare pearl found in the depths of the sea.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
பாடல் #1192 இல் உள்ளபடி, சாதகரின் குண்டலினி சோதியானது சகஸ்ரதளத்தில் இருக்கும் இறைவியோடு சேர்ந்து அடங்கி இருக்கும் போது, இறைவியின் சக்தியானது சாதகருக்குள் இருக்கும் ஆறு ஆதார சக்கரங்களிலும் ஒன்றாகக் கலந்திருக்கும்.
As in verse 1192, when the seeker's kundalini flame stands merged and at rest with the Goddess at the sahasradalam, the Goddess's power mingles as one with the six adhara chakras within the seeker.
- வரி 2Line 2
அப்போது அந்தச் சக்கரங்களின் உள்ளே படிந்திருக்கின்ற இன்பத்தை அனுபவித்துக் கொண்டிருக்கின்ற நிலையிலிருந்து சாதகர் தம்மை நீக்கி விட்டால்,
When the seeker then withdraws from the state of continually savouring the bliss settled within those chakras,
- வரி 3Line 3
அவருக்குள்ளிருந்து பிரகாசமாக ஒரு மந்திரம் மூலாதாரத்திலிருந்து மேலெழும்பி வரும்.
a radiant mantra rises up from within them, from the muladhara.
- வரி 4Line 4
இந்த மந்திரமே, கடலின் ஆழத்தில் கிடைக்கும் அபூர்வமான முத்து போன்ற மிகப் பெரும் செல்வமாகும் என இப்பாடல் கூறுகிறது.
this mantra itself is a very great treasure, like the rare pearl found in the depths of the sea, this verse declares.
திருமந்திரம் பாடல் #1193





