தொடர்ந்து படிக்கread this section continuously
சடங்கது செய்து தவம்புரி வார்கள்கடந்தனி லுள்ளே கருதுவ ராகில்தொடர்ந்தெழு சோதி துளைவழி யேறிஅடங்கிடு மன்பின தாயிழை பாலே.
உரைmeaning
பாடல் #1191 இல் உள்ளபடி, ஐந்து பூதங்களையும் இறைவன் இறைவி ஆன்மாவுடன் ஒன்றாகப் பொருந்தி நின்று செய்கின்ற சாதகத்தையே தவமாக மேற்கொள்ளுகின்ற சாதகர்கள், தங்களின் உடலை மறந்து, அதற்கு உள்ளே உணர்ந்திருக்கின்ற இறை சக்தியையே எண்ணிக் கொண்டிருந்தால், அவர்களின் அந்த எண்ணத்தைத் தொடர்ந்து மூலாதாரத்திலுள்ள குண்டலினி சோதியானது எழும்பி, சுழுமுனை நாடித் துளை வழியே மேலேறிச் சென்று, சகஸ்ரதளத்தில் சோதியாக இருக்கின்ற, பேரன்பின் வடிவான சாதகரின் அன்பிற்கு ஏற்ற அழகிய அணிகலன்களை அணிந்திருக்கும் இறைவியிடம் சென்று அடங்கி விடும் என இப்பாடல் கூறுகிறது.
As in verse 1191, this verse declares that when seekers who take up as their tapas the sadhana in which the five elements come together and abide as one with the Lord, the Goddess and the soul, forget their own body and keep dwelling only on the divine power they feel within it, then, following that thought of theirs, the kundalini flame in the muladhara rises and, climbing up through the channel of the sushumna nadi, goes and comes to rest at the feet of the Goddess, the form of supreme love, who stands as a flame at the sahasradalam and wears beautiful ornaments fitting the seeker's love.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
பாடல் #1191 இல் உள்ளபடி, ஐந்து பூதங்களையும் இறைவன் இறைவி ஆன்மாவுடன் ஒன்றாகப் பொருந்தி நின்று செய்கின்ற சாதகத்தையே தவமாக மேற்கொள்ளுகின்ற சாதகர்கள்,
As in verse 1191, seekers who take up as their tapas the sadhana in which the five elements come together and abide as one with the Lord, the Goddess and the soul,
- வரி 2Line 2
தங்களின் உடலை மறந்து, அதற்கு உள்ளே உணர்ந்திருக்கின்ற இறை சக்தியையே எண்ணிக் கொண்டிருந்தால்,
if they forget their own body and keep dwelling only on the divine power they feel within it,
- வரி 3Line 3
அவர்களின் அந்த எண்ணத்தைத் தொடர்ந்து மூலாதாரத்திலுள்ள குண்டலினி சோதியானது எழும்பி, சுழுமுனை நாடித் துளை வழியே மேலேறிச் சென்று,
then, following that thought of theirs, the kundalini flame in the muladhara rises and, climbing up through the channel of the sushumna nadi,
- வரி 4Line 4
சகஸ்ரதளத்தில் சோதியாக இருக்கின்ற, பேரன்பின் வடிவான சாதகரின் அன்பிற்கு ஏற்ற அழகிய அணிகலன்களை அணிந்திருக்கும் இறைவியிடம் சென்று அடங்கி விடும் என இப்பாடல் கூறுகிறது.
goes and comes to rest at the feet of the Goddess, the form of supreme love, who stands as a flame at the sahasradalam and wears beautiful ornaments fitting the seeker's love, this verse declares.
திருமந்திரம் பாடல் #1192





