தொடர்ந்து படிக்கread this section continuously
மங்கையு மாரனுந் தம்மொடு கூடிநின்றங்குலி கூட்டி யகம்புறம் பார்த்தனர்கொங்கைநல் லாளுங் குமாரர்க ளைவரும்தங்களின் மேவிச் சடங்குசெய் தாரே.
உரைmeaning
பாடல் #1190 இல் உள்ளபடி இறைவி அருளிய வழியின்படியே சிரத்தையோடு வழிபடும் முறையை இந்தப் பாடலில் அறிந்து கொள்ளலாம். என்றும் இளமையுடன் இருக்கும் இறைவியும் இறைவனும் ஒன்றாகச் சேர்ந்து, சாதகரின் நெஞ்சத்திற்குள் இருக்கும் ஆன்மாவோடு ஒன்றாகச் சேர்ந்து வீற்றிருந்து, சாதகரின் உள்ளுக்குள்ளும் வெளியிலும் இருக்கின்ற இறை சக்தியைப் பார்த்துக் கொண்டு சாதகம் செய்து கொண்டிருக்கின்றார்கள். இந்தச் சாதகத்தின் பயனாக, பேரின்பமாகிய அமிழ்தப் பாலைக் கொடுக்கும் அழகிய முலைகளையுடைய நன்மையின் வடிவான இறைவி, சாதகருக்கு ஞானத்தை உணர்த்தி அருளுகின்றாள். அந்த ஞானத்தின் மூலம் சாதகர் தமக்குள் இருக்கும் ஐந்து பூதங்களும், வெளியில் இருக்கும் ஐந்து பூதங்களும் ஒரே சக்தியாக இருப்பதை உணர்ந்து கொள்கின்றார். அதன் பிறகு, தமக்குள் இறை சக்தியாக உணர்ந்த அந்த ஐந்து பூதங்களையும் கொண்டு, தமக்குள் உணர்ந்த இறைவன் இறைவி ஆன்மாவுடன் ஒன்றாகப் பொருந்தி நின்று சாதகர் சடங்கு செய்கின்றார்.
This verse lets us know the way of devoted worship that follows the path the Goddess graciously gave, as in verse #1190. The ever-youthful Goddess and God, united together, dwell united with the soul within the sadhaka's heart, and watch over the divine power present both within and outside the sadhaka as they perform sadhana. As the fruit of this sadhana, the Goddess, the good and beautiful-breasted one who gives the nectar-milk of supreme bliss, graciously reveals wisdom to the sadhaka. Through that wisdom, the sadhaka realizes that the five elements within him and the five elements outside are one and the same power. After that, the sadhaka, holding those five elements now realized within him as the divine power, remains united as one with the God, Goddess and soul realized within him, and performs the rite.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
என்றும் இளமையுடன் இருக்கும் இறைவியும் இறைவனும் ஒன்றாகச் சேர்ந்து, சாதகரின் நெஞ்சத்திற்குள் இருக்கும் ஆன்மாவோடு ஒன்றாகச் சேர்ந்து வீற்றிருக்கின்றார்கள்.
The ever-youthful Goddess and God, united together, dwell united with the soul within the sadhaka's heart.
- வரி 2Line 2
சாதகரின் உள்ளுக்குள்ளும் வெளியிலும் இருக்கின்ற இறை சக்தியைப் பார்த்துக் கொண்டு சாதகம் செய்து கொண்டிருக்கின்றார்கள்.
They watch over the divine power present both within and outside the sadhaka as they perform sadhana.
- வரி 3Line 3
இந்தச் சாதகத்தின் பயனாக, பேரின்பமாகிய அமிழ்தப் பாலைக் கொடுக்கும் அழகிய முலைகளையுடைய நன்மையின் வடிவான இறைவி, சாதகருக்கு ஞானத்தை உணர்த்தி அருளுகின்றாள். அந்த ஞானத்தின் மூலம் சாதகர் தமக்குள் இருக்கும் ஐந்து பூதங்களும் வெளியில் இருக்கும் ஐந்து பூதங்களும் ஒரே சக்தியாக இருப்பதை உணர்ந்து கொள்கின்றார்.
As the fruit of this sadhana, the Goddess, the good and beautiful-breasted one who gives the nectar-milk of supreme bliss, graciously reveals wisdom to the sadhaka. Through that wisdom, the sadhaka realizes that the five elements within him and the five elements outside are one and the same power.
- வரி 4Line 4
அதன் பிறகு, தமக்குள் இறை சக்தியாக உணர்ந்த அந்த ஐந்து பூதங்களையும் கொண்டு, தமக்குள் உணர்ந்த இறைவன் இறைவி ஆன்மாவுடன் ஒன்றாகப் பொருந்தி நின்று சாதகர் சடங்கு செய்கின்றார்.
After that, the sadhaka, holding those five elements now realized within him as the divine power, remains united as one with the God, Goddess and soul realized within him, and performs the rite.
திருமந்திரம் பாடல் #1191





