தொடர்ந்து படிக்கread this section continuously
இருந்தன ளேந்திழை யீறதி லாகத்திருந்திய ஆனந்தஞ் செந்நெறி நண்ணிப்பொருந்து புவனங்கள் போற்றிசெய் தேத்தவருந்த விருந்தனள் மங்கைநல் லாளே.
உரைmeaning
பாடல் #1189 இல் உள்ளபடி சாதகரின் மனதிற்குள் புதியதாகப் புகுந்து வீற்றிருக்கும் இறைவியானவள், அழகிய ஆபரணங்களை அணிந்து கொண்டு அவரது மனதையே தனக்கு ஏற்ற இடமாகக் கொண்டு வீற்றிருந்து, அவளுக்கு ஏற்ற விதத்தில் மாறியிருக்கும் அந்த மனதிற்குப் பேரானந்தத்தைக் கொடுக்கும் சிறப்பான வழிகளைக் காண்பித்து, அதன்படியே சாதகரை நடக்க வைத்து அருளுகின்றாள். அனைத்து உலகங்களிலும் வாழும் உயிர்களும் போற்றி வணங்குகின்ற இறைவனை, சாதகர் தமக்கு இறைவி அருளிய சிறப்பான வழிகளில் சிரத்தையோடு வழிபடும் போது, அதை ஏற்றுக் கொண்டு மகிழ்வோடு வீற்றிருக்கின்றாள், என்றும் இளமையுடன் இருக்கும் நன்மையின் வடிவான இறைவி.
As in verse #1189, the Goddess, newly entered and dwelling within the sadhaka's mind, wearing beautiful ornaments and taking his mind, now become a fit dwelling place for her, as her own abode, graciously shows that mind, transformed to suit her, the special ways that grant supreme bliss, and makes the sadhaka walk accordingly. When the sadhaka, with devotion, worships along those special ways the Goddess has graciously given him, worshipping God whom all souls living in every world praise and adore, she accepts it and dwells there in joy, the ever-youthful Goddess who is the very form of what is good.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
பாடல் #1189 இல் உள்ளபடி சாதகரின் மனதிற்குள் புதியதாகப் புகுந்து வீற்றிருக்கும் இறைவியானவள், அழகிய ஆபரணங்களை அணிந்து கொண்டு அவரது மனதையே தனக்கு ஏற்ற இடமாகக் கொண்டு வீற்றிருக்கின்றாள்.
As in verse #1189, the Goddess, newly entered and dwelling within the sadhaka's mind, wearing beautiful ornaments, takes his mind as her own abode.
- வரி 2Line 2
அவளுக்கு ஏற்ற விதத்தில் மாறியிருக்கும் அந்த மனதிற்குப் பேரானந்தத்தைக் கொடுக்கும் சிறப்பான வழிகளைக் காண்பித்து, அதன்படியே சாதகரை நடக்க வைத்து அருளுகின்றாள்.
She graciously shows that mind, transformed to suit her, the special ways that grant supreme bliss, and makes the sadhaka walk accordingly.
- வரி 3Line 3
அனைத்து உலகங்களிலும் வாழும் உயிர்களும் போற்றி வணங்குகின்ற இறைவனை, சாதகர் தமக்கு இறைவி அருளிய சிறப்பான வழிகளில் சிரத்தையோடு வழிபடுகின்றார்.
The sadhaka, with devotion, worships along those special ways the Goddess has graciously given him, worshipping God whom all souls living in every world praise and adore.
- வரி 4Line 4
அப்போது அதை ஏற்றுக் கொண்டு மகிழ்வோடு வீற்றிருக்கின்றாள், என்றும் இளமையுடன் இருக்கும் நன்மையின் வடிவான இறைவி.
She accepts it and dwells there in joy, the ever-youthful Goddess who is the very form of what is good.
திருமந்திரம் பாடல் #1190





