தொடர்ந்து படிக்கread this section continuously
ஈறது தான்முத லெண்ணிரண் டாயிரம்மாறுத லின்றி மனோவச மாயெழில்தூறது செய்யுஞ் சுகந்தச் சுழியதுபேறது செய்து பிறந்துஇருந் தாளே.
உரைmeaning
பாடல் #1188 இல் உள்ளபடி அனைத்தும் சென்று அடைகின்ற இறுதியான இடமாக இருக்கின்ற இறைவியானவள், சாதகருக்குள் இருக்கும் சகஸ்ரதளத்தின் ஆயிரம் இதழ் கொண்ட தாமரை மலரிலும், அதன் பதினாறு கலைகளிலும் (முதல் வரியில் வரும் எண்ணிரண்டாயிரம் என்னும் சொல்லின் பொருள் எண் என்றால் எட்டு, அதை இரண்டால் பெருக்கினால் வரும் பதினாறு; பாடல் #1070 இல் காண்க) முதன்மையாவளாக வீற்றிருந்து, சாதகரின் தன்மைக்கு ஏற்றபடி அவருடைய மனதைத் தன் வசப்படுத்தி, வேறு எதிலும் அதைச் செல்ல விடாமல் தடுத்துக் காப்பாற்றி, அந்த மனதைத் தாம் வசிப்பதற்கு ஏற்ற இடமாகப் பேரழகுடனும் நறுமணத்துடனும் மாற்றுவதற்கு, மனதில் இருக்கும் அழுக்குகளை நீக்கிச் சுத்தம் செய்து, சாதகருக்குப் பேரருளைக் கொடுத்து, அதன்படி மாறிய மனதிற்குள் புதியதாகப் புகுந்து வீற்றிருக்கின்றாள்.
As in verse #1188, the Goddess, the final place to which all of it goes and arrives, dwells foremost within the sadhaka in the thousand-petaled lotus of the sahasrara and its sixteen kalas (the verse's own compressed word in the first line reads as eight doubled, giving sixteen; see verse #1070). She takes his mind under her own control according to his own nature, guards and stops it from wandering into anything else, cleanses the impurities within it to remake it, with great beauty and fragrance, into a fit dwelling place for herself, grants the sadhaka her great grace, and newly enters and dwells within the mind so transformed.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
பாடல் #1188 இல் உள்ளபடி அனைத்தும் சென்று அடைகின்ற இறுதியான இடமாக இருக்கின்ற இறைவியானவள், சாதகருக்குள் இருக்கும் சகஸ்ரதளத்தின் ஆயிரம் இதழ் கொண்ட தாமரை மலரிலும் அதன் பதினாறு கலைகளிலும் (முதல் வரியில் வரும் எண்ணிரண்டாயிரம் என்னும் சொல் எண் எட்டு இரண்டால் பெருக்கினால் வரும் பதினாறைக் குறிக்கும்; பாடல் #1070 இல் காண்க) முதன்மையாவளாக வீற்றிருக்கின்றாள்.
As in verse #1188, the Goddess, the final place to which all of it goes and arrives, dwells foremost within the sadhaka in the thousand-petaled lotus of the sahasrara and its sixteen kalas (the verse's own compressed word in the first line reads as eight doubled, giving sixteen; see verse #1070).
- வரி 2Line 2
சாதகரின் தன்மைக்கு ஏற்றபடி அவருடைய மனதைத் தன் வசப்படுத்தி, வேறு எதிலும் அதைச் செல்ல விடாமல் தடுத்துக் காப்பாற்றுகின்றாள்.
She takes his mind under her own control according to his own nature, and guards and stops it from wandering into anything else.
- வரி 3Line 3
அந்த மனதைத் தாம் வசிப்பதற்கு ஏற்ற இடமாகப் பேரழகுடனும் நறுமணத்துடனும் மாற்றுவதற்கு, மனதில் இருக்கும் அழுக்குகளை நீக்கிச் சுத்தம் செய்கின்றாள்.
She cleanses the impurities within his mind to remake it, with great beauty and fragrance, into a fit dwelling place for herself.
- வரி 4Line 4
சாதகருக்குப் பேரருளைக் கொடுத்து, அதன்படி மாறிய மனதிற்குள் புதியதாகப் புகுந்து வீற்றிருக்கின்றாள்.
She grants the sadhaka her great grace, and newly enters and dwells within the mind so transformed.
திருமந்திரம் பாடல் #1189





