திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1188

நான்காம் தந்திரம்8. ஆதார ஆதேயம்

தொடர்ந்து படிக்கread this section continuously

இந்துவி னின்றெழு நாத மிரவிபோல்வந்தபின் நாக்கின் மதித்தெழுங் கண்டத்தில்உந்திய சோதி இதயத் தெழுமொலிஇந்துவின் மேலுற்ற ஈறுஅது தானே.

உரை

பாடல் #1187 இல் உள்ளபடி சந்திர மண்டலத்தில் வீற்றிருக்கின்ற இறைவியை சாதகர்கள் உணர்ந்த பிறகு, அங்கிருந்து எழுகின்ற நாத (ஒலி) சக்தி சூரியனின் கதிர்களைப் போலத் திரும்பிக் கீழ் நோக்கி வந்து, அந்த நாக்கின் அடியில் சோதியாக உருவாகி, அந்த சோதியைத் தொண்டைக்குள்ளிருந்து இதயத்திற்குள் உந்தித் தள்ளுகிறது. இதயத்திற்குள் வந்த சோதி ஒலியாக மாறி ஒலிக்கின்றது. இப்படிச் சந்திர மண்டலத்தில் எழுகின்ற நாத (ஒலி) சக்தி சூரிய கதிர்களைப் போலத் தொண்டைக்குள் சோதியாகிப் பின் இதயத்திற்குள் ஒலியாக மாறுகின்ற அனைத்தும் சென்று அடைகின்ற இறுதியான இடமாக, சந்திர மண்டலத்தில் வீற்றிருக்கும் இறைவி இருக்கின்றாள்.

வரி வாரியாக

  • வரி 1

    பாடல் #1187 இல் உள்ளபடி சந்திர மண்டலத்தில் வீற்றிருக்கின்ற இறைவியை சாதகர்கள் உணர்ந்த பிறகு, அங்கிருந்து எழுகின்ற நாத (ஒலி) சக்தி சூரியனின் கதிர்களைப் போலத் திரும்பிக் கீழ் நோக்கி வருகின்றது.

  • வரி 2

    அந்த நாக்கின் அடியில் சோதியாக உருவாகி, அந்த சோதியைத் தொண்டைக்குள்ளிருந்து இதயத்திற்குள் உந்தித் தள்ளுகிறது.

  • வரி 3

    இதயத்திற்குள் வந்த சோதி ஒலியாக மாறி ஒலிக்கின்றது.

  • வரி 4

    இப்படிச் சூரிய கதிர்களைப் போல எழுந்து, தொண்டைக்குள் சோதியாகிப் பின் இதயத்திற்குள் ஒலியாக மாறுகின்ற அனைத்தும் சென்று அடைகின்ற இறுதியான இடமாக, சந்திர மண்டலத்தில் வீற்றிருக்கும் இறைவி இருக்கின்றாள்.

திருமந்திரம் பாடல் #1188

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout