தொடர்ந்து படிக்கread this section continuously
மூன்றுள மண்டல மோகினி சேர்விடம்ஏன்றுள வீரா றெழுகலை யுச்சியில்தோன்று மிலக்குற வாகுதன் மாமாயைஏன்றன ளேழிரண் டிந்துவோடு ஈறே.
உரைmeaning
பாடல் #1186 இல் உள்ளபடி இறைவி கூறியபடி, சாதகருக்குள் இருக்கின்ற மூன்று மண்டலங்களிலும் இறைவி மாயையின் தலைவியாகச் சேர்ந்திருக்கின்றாள். சாதகருடைய தலை உச்சியில் உள்ள பதினாறு கலைகளும் அங்கே எழுந்து தோன்றுகின்றன. அந்த மாமாயையிலிருந்து நீங்கி இறைவியை அடைவதற்கு, பாடல் #1186 இல் இறைவி அருளியபடி சாதகம் செய்தால், அவளை அடையலாம். அவளது இறுதியான இடம், சந்திரனுடன் சேர்ந்த ஒன்பதாவது நிலையாகும்.
As in verse #1186, according to what the Goddess declared, she herself dwells as mistress of Maya together in the three mandalas within the sadhaka. The sixteen kalas at the crown of the sadhaka's head rise and appear there too. To go beyond that Great Maya and attain the Goddess, one may reach her by performing the sadhana she herself graciously gave in verse #1186. Her final abode is the ninth station, together with the moon.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
பாடல் #1186 இல் உள்ளபடி இறைவி கூறியபடி, சாதகருக்குள் இருக்கின்ற மூன்று மண்டலங்களிலும் இறைவி மாயையின் தலைவியாகச் சேர்ந்திருக்கின்றாள்.
As in verse #1186, according to what the Goddess declared, she herself dwells as mistress of Maya together in the three mandalas within the sadhaka.
- வரி 2Line 2
சாதகருடைய தலை உச்சியில் உள்ள பதினாறு கலைகளும் அங்கே எழுந்து தோன்றுகின்றன.
The sixteen kalas at the crown of the sadhaka's head rise and appear there too.
- வரி 3Line 3
அந்த மாமாயையிலிருந்து நீங்கி இறைவியை அடைவதற்கு, பாடல் #1186 இல் இறைவி அருளியபடி சாதகம் செய்தால், அவளை அடையலாம்.
To go beyond that Great Maya and attain the Goddess, one may reach her by performing the sadhana she herself graciously gave in verse #1186.
- வரி 4Line 4
அவளது இறுதியான இடம், சந்திரனுடன் சேர்ந்த ஒன்பதாவது நிலையாகும்.
Her final abode is the ninth station, together with the moon.
திருமந்திரம் பாடல் #1187





