தொடர்ந்து படிக்கread this section continuously
அதுவிது வென்னு மவாவினை நீக்கித்துதியது செய்து சுழியுற நோக்கில்விதியது தன்னையும் வென்றிட லாகும்மதிமல ராள்சொன்ன மண்டல மூன்றே.
உரைmeaning
உலகப் பற்றுக்களில் அது வேண்டும் இது வேண்டும் என்று அலைகின்ற ஆசைகளை அகற்றிவிட்டு, இறைவியைப் போற்றி வணங்கித் தியானத்தில் இருந்தால், மூச்சுக் காற்றையும் இறப்பையும் வென்று என்றும் இறவாமல் இருக்கும் வழியை அடையலாம் என்று, சந்திர மண்டலத்தில் தாமரை மலரில் வீற்றிருக்கும் இறைவியானவள் எம்மிடம் எடுத்துக் கூறிய மண்டலங்கள் மூன்றாகும்.
If, having driven away the desires that wander in worldly attachments wanting this and wanting that, one praises and worships the Goddess and abides in meditation, one may attain the way of conquering the breath and death, and of remaining ever deathless, so the Goddess, dwelling on a lotus flower in the chandra mandalam, herself told us. These are the three mandalas she spoke of.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
உலகப் பற்றுக்களில் அது வேண்டும் இது வேண்டும் என்று அலைகின்ற ஆசைகளை அகற்றிவிட்டு,
Having driven away the desires that wander in worldly attachments wanting this and wanting that,
- வரி 2Line 2
இறைவியைப் போற்றி வணங்கித் தியானத்தில் இருந்தால்,
if one praises and worships the Goddess and abides in meditation,
- வரி 3Line 3
மூச்சுக் காற்றையும் இறப்பையும் வென்று என்றும் இறவாமல் இருக்கும் வழியை அடையலாம்.
one may attain the way of conquering the breath and death, and of remaining ever deathless.
- வரி 4Line 4
இதைச் சந்திர மண்டலத்தில் தாமரை மலரில் வீற்றிருக்கும் இறைவியானவள் எம்மிடம் எடுத்துக் கூறினாள்; இவையே அவள் சொன்ன மூன்று மண்டலங்கள்.
This the Goddess, dwelling on a lotus flower in the chandra mandalam, herself told us; these are the three mandalas she spoke of.
திருமந்திரம் பாடல் #1186





