திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1185

நான்காம் தந்திரம்8. ஆதார ஆதேயம்

தொடர்ந்து படிக்கread this section continuously

இருந்தன ளேந்திழை யென்னுள்ள மேவித்திருந்து புணர்ச்சியில் தேர்ந்துணர்ந் துன்னிநிரந்தர மாகிய நீர்திசை யோடுபொருந்த விலக்கிற் புணர்ச்சி யதுவே.

உரை

பாடல் #1184 இல் உள்ளபடி சாதகர்களோடு கலந்து இன்பமாக வீற்றிருக்கின்ற இறைவியானவள் எவ்வாறு கலந்திருக்கின்றாள் என்பதை இந்தப் பாடலில் அறிந்து கொள்ளலாம். இறைவியானவள் பேரழகுடன் ஆபரணங்களை அணிந்து கொண்டு எமது உள்ளத்திற்குள் புகுந்து வீற்றிருந்து எம்மோடு கலந்திருப்பதில் மேல் நிலை பெற்றதை யாம் பரிபூரணமாக எமக்குள் உணர்ந்து, அதையே எப்போதும் மனதிற்குள் எண்ணிக்கொண்டு, இறைவியோடு இருப்பதே என்றும் நிரந்தரம் என்கிற உணர்வோடு பத்துத் திசைகளிலும் வீற்றிருக்கின்ற இறைவியோடு யாமும் சேர்ந்திருப்பதையே குறிக்கோளாக வைத்திருப்பது, இறைவியோடு உண்மையாகக் கலந்திருக்கும் நிலையாகும்.

வரி வாரியாக

  • வரி 1

    பாடல் #1184 இல் உள்ளபடி இறைவியானவள் பேரழகுடன் ஆபரணங்களை அணிந்து கொண்டு எமது உள்ளத்திற்குள் புகுந்து வீற்றிருந்து எம்மோடு கலந்திருக்கின்றாள்.

  • வரி 2

    அவளோடு கலந்திருப்பதில் மேல் நிலை பெற்றதை யாம் பரிபூரணமாக எமக்குள் உணர்ந்தோம்.

  • வரி 3

    அதையே எப்போதும் மனதிற்குள் எண்ணிக்கொண்டு, இறைவியோடு இருப்பதே என்றும் நிரந்தரம் என்கிற உணர்வோடு இருக்கின்றோம்.

  • வரி 4

    பத்துத் திசைகளிலும் வீற்றிருக்கின்ற இறைவியோடு யாமும் சேர்ந்திருப்பதையே குறிக்கோளாக வைத்திருப்பது, இறைவியோடு உண்மையாகக் கலந்திருக்கும் நிலையாகும்.

திருமந்திரம் பாடல் #1185

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout