திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1183

நான்காம் தந்திரம்8. ஆதார ஆதேயம்

தொடர்ந்து படிக்கread this section continuously

உள்ளத்தி னுள்ளே யுடனிருந் தைவர்தங்கள்ளத்தை நீக்கிக் கலந்துட னேபுல்கிக்கொள்ளத் தவநெறி கூடிய இன்பத்துவள்ளல் தலைவி மருட்டிப் புரிந்தே.

உரை

பாடல் #1182 இல் உள்ளபடி உண்மை ஞானத்தோடு கலந்து ஒன்றாகச் சாதகரின் உயிருக்குள் நிற்கின்ற இறைவியானவள் அவருக்கு எவ்வாறு அருள் புரிகிறாள் என்பதை இப்பாடலில் அறிந்து கொள்ளலாம். சாதகரின் உள்ளத்திற்கு உள்ளே வந்து அவருடனே சேர்ந்து நிற்கின்ற இறைவியானவள், அவரின் ஐந்து புலன்களும் இறைவனை நோக்கிச் செல்வதைத் தடுத்து ஆசைகளின் வழியே செல்ல வைக்கின்ற கள்ளத் தனத்தை (வஞ்சகத் தன்மையை) அகற்றி, அவருடன் ஒன்றாகக் கலந்து நின்று, அவரைத் தம்மோடு அணைத்துக் கொண்டு, அவர் கொண்ட தவத்தின் வழிப்படியே செல்வதில் இருந்து தவறிவிடாமல் காப்பாற்றி, அவர் செய்கின்ற தவம் கைகூடும் காலத்தில் பேரின்பத்தை அளித்து, அதிலேயே அவர் லயித்திருக்குமாறு அருளுகின்ற பெருங்கருணை கொண்ட வள்ளல் தலைவியாக இருக்கின்றாள்.

வரி வாரியாக

  • வரி 1

    பாடல் #1182 இல் உள்ளபடி சாதகரின் உள்ளத்திற்கு உள்ளே வந்து அவருடனே சேர்ந்து நிற்கின்ற இறைவியானவள், அவரின் ஐந்து புலன்களும் இறைவனை நோக்கிச் செல்வதைத் தடுத்து ஆசைகளின் வழியே செல்ல வைக்கின்ற கள்ளத் தனத்தை (வஞ்சகத் தன்மையை) அகற்றுகின்றாள்.

  • வரி 2

    அவருடன் ஒன்றாகக் கலந்து நின்று, அவரைத் தம்மோடு அணைத்துக் கொள்கின்றாள்.

  • வரி 3

    அவர் கொண்ட தவத்தின் வழிப்படியே செல்வதில் இருந்து தவறிவிடாமல் காப்பாற்றுகின்றாள்.

  • வரி 4

    அவர் செய்கின்ற தவம் கைகூடும் காலத்தில் பேரின்பத்தை அளித்து, அதிலேயே அவர் லயித்திருக்குமாறு அருளுகின்ற பெருங்கருணை கொண்ட வள்ளல் தலைவியாக இருக்கின்றாள்.

திருமந்திரம் பாடல் #1183

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout