திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1182

நான்காம் தந்திரம்8. ஆதார ஆதேயம்

தொடர்ந்து படிக்கread this section continuously

பிறிவின்றி நின்ற பெருந்தகைப் பேதைகுறியொன்றி நின்றிடுங் கோமளக் கொம்புபொறியொன்றி நின்று புணர்ச்சிசெய் தாங்கேஅறிவொன்றி நின்றன ளாருயி ருள்ளே.

உரை

பாடல் #1181 இல் உள்ளபடி இறைவன் வேறு ஆன்மா வேறு என்று பிரிந்திருக்கும் தன்மையை நீக்கி இறைவனோடு ஒன்றாகச் சேர்வதற்கு அருளுகின்ற இறைவியானவள், ஆரம்ப நிலையில் சாதகரின் ஆன்மாவைப் பெரும் கருணையோடு காத்து நின்று, இறைவனை அடைய வேண்டும் என்று நினைக்கின்ற அவரின் எண்ணங்களோடு சேர்ந்து நின்று, கொம்பின் உயரத்திற்கு ஏற்ப வளர்கின்ற பூங்கொடியைப் போலச் சாதகரின் எண்ணங்களுக்கு ஏற்ப அருள் புரிகின்ற அழகிய பூங்கொடியாக இருக்கின்றாள். இறைவனை அடைய வேண்டும் என்று நினைக்கின்ற சாதகரின் மனதை அதற்கு ஏற்பப் பக்குவப்படுத்தி, அதனோடு ஒன்றாகச் சேர்ந்து நின்று, அவருக்கு இறைவனை அடைவதற்கு வேண்டிய உண்மை ஞானத்தை அருளி, அந்த ஞானத்தோடு கலந்து, ஒன்றாகச் சாதகரின் உயிருக்குள் நிற்கின்றாள்.

வரி வாரியாக

  • வரி 1

    பாடல் #1181 இல் உள்ளபடி இறைவன் வேறு ஆன்மா வேறு என்று பிரிந்திருக்கும் தன்மையை நீக்கி இறைவனோடு ஒன்றாகச் சேர்வதற்கு அருளுகின்ற இறைவியானவள், ஆரம்ப நிலையில் சாதகரின் ஆன்மாவைப் பெரும் கருணையோடு காத்து நிற்கின்றாள்.

  • வரி 2

    இறைவனை அடைய வேண்டும் என்று நினைக்கின்ற அவரின் எண்ணங்களோடு சேர்ந்து நின்று, கொம்பின் உயரத்திற்கு ஏற்ப வளர்கின்ற பூங்கொடியைப் போலச் சாதகரின் எண்ணங்களுக்கு ஏற்ப அருள் புரிகின்ற அழகிய பூங்கொடியாக இருக்கின்றாள்.

  • வரி 3

    இறைவனை அடைய வேண்டும் என்று நினைக்கின்ற சாதகரின் மனதை அதற்கு ஏற்பப் பக்குவப்படுத்தி, அதனோடு ஒன்றாகச் சேர்ந்து நிற்கின்றாள்.

  • வரி 4

    அவருக்கு இறைவனை அடைவதற்கு வேண்டிய உண்மை ஞானத்தை அருளி, அந்த ஞானத்தோடு கலந்து, ஒன்றாகச் சாதகரின் உயிருக்குள் நிற்கின்றாள்.

திருமந்திரம் பாடல் #1182

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout