தொடர்ந்து படிக்கread this section continuously
கூறிய கன்னி குலாய புருவத்தள்சீறிய ளாயுல கேழுந் திகழ்ந்தவள்ஆரிய நங்கை யமுத பயோதரிபேருயி ராளி பிறிவுஅறுத் தாளே.
உரைmeaning
பாடல் #1180 இல் உள்ளபடி இறைவனோடு பல விதங்களில் கலந்திருக்கும் இறைவியானவள் அவனோடு உத்தமமான உயிர்களையும் சேர்த்து அருளுவதை இந்தப் பாடலில் அறிந்து கொள்ளலாம். எம்மால் புகழ்ந்து கூறப்படுகின்ற என்றும் இளமை பொருந்திய இறைவியானவள் வளைந்த புருவங்களோடு சீரும் சிறப்பும் கொண்டவளாக ஏழு உலகங்களிலும் திகழ்ந்திருக்கின்றாள். வேதங்களாகவே இருக்கின்ற என்றும் இளமையான இறைவி, உயிர்களுக்கு உண்மை ஞானத்தைக் கொடுக்கின்ற அமிழ்தப் பாலைக் கொண்ட தனங்களை உடையவள். தகுதியான உயிர்களுக்கு உண்மை ஞானத்தைக் கொடுக்கின்ற அமிழ்தப் பாலை அளித்து ஆட்கொண்டு, இறைவன் வேறு ஆன்மா வேறு என்று பிரிந்திருக்கும் அவர்களின் தன்மையை நீக்கி, இறைவனோடு ஒன்றாகச் சேர்த்து அருளுகின்றாள்.
This verse lets us know how the Goddess, who is united with God in many ways as in verse #1180, graciously joins worthy souls with him too. The ever-youthful Goddess, whom we praise and extol, with her curved brows, radiant in glory and splendour, shines in all seven worlds. The ever-youthful Goddess, who is herself the Vedas, bears breasts that hold the nectar-milk that gives true wisdom to living beings. Granting worthy souls that nectar-milk which gives true wisdom, and taking them into her care, she removes their sense of being separate, of God being one and the soul another, and graciously joins them as one with God.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
பாடல் #1180 இல் உள்ளபடி எம்மால் புகழ்ந்து கூறப்படுகின்ற என்றும் இளமை பொருந்திய இறைவியானவள் வளைந்த புருவங்களோடு சீரும் சிறப்பும் கொண்டவளாக ஏழு உலகங்களிலும் திகழ்ந்திருக்கின்றாள்.
As in verse #1180, the ever-youthful Goddess, whom we praise and extol, with her curved brows, radiant in glory and splendour, shines in all seven worlds.
- வரி 2Line 2
வேதங்களாகவே இருக்கின்ற என்றும் இளமையான இறைவி, உயிர்களுக்கு உண்மை ஞானத்தைக் கொடுக்கின்ற அமிழ்தப் பாலைக் கொண்ட தனங்களை உடையவள்.
The ever-youthful Goddess, who is herself the Vedas, bears breasts that hold the nectar-milk that gives true wisdom to living beings.
- வரி 3Line 3
தகுதியான உயிர்களுக்கு உண்மை ஞானத்தைக் கொடுக்கின்ற அமிழ்தப் பாலை அளித்து ஆட்கொள்கின்றாள்.
Granting worthy souls that nectar-milk which gives true wisdom, she takes them into her care.
- வரி 4Line 4
இறைவன் வேறு ஆன்மா வேறு என்று பிரிந்திருக்கும் அவர்களின் தன்மையை நீக்கி, இறைவனோடு ஒன்றாகச் சேர்த்து அருளுகின்றாள்.
She removes their sense of being separate, of God being one and the soul another, and graciously joins them as one with God.
திருமந்திரம் பாடல் #1181





