தொடர்ந்து படிக்கread this section continuously
பத்து முகமுடை யாளெம் பராசத்திவைத்தன ளாறங்க நாலுடன் றான்வேதம்ஒத்தனள் ளாதார மொன்றுட னோங்கியேநித்தமாய் நின்றாளெம் நேரிழை கூறே.
உரைmeaning
பாடல் #1179 இல் உள்ளபடி பத்துத் திசைகளையும் தமக்குள் கொண்டவளான இறைவி இறைவனோடு சேர்ந்து எப்படி இருக்கின்றாள் என்பதை இந்தப் பாடலில் அறிந்து கொள்ளலாம். பத்துத் திசைகளையும் பத்து முகங்களாகக் கொண்ட எமது பராசக்தியான இறைவியே, உயிர்கள் உய்ய வேண்டும் என்று நான்கு வேதங்களையும் அவற்றின் ஆறு அங்கங்களையும் உருவாக்கி வைத்து அருளினாள். அவளே அனைத்திற்கும் ஆதாரமான இறைவனுடன் ஒன்றாகச் சேர்ந்து, மிகவும் உயர்ந்த நிலையில் எல்லாக் காலத்திலும் எப்போதும் இறைவனுடன் சரிசமமான பாகமாகச் சேர்ந்தே நிற்கின்றாள்.
This verse lets us know how the Goddess, who holds all ten directions within herself as in verse #1179, remains united with God. Our Parasakthi, who holds the ten directions as ten faces, graciously created and set in place the four Vedas and their six angas, so that souls might be delivered. She herself, united as one with God, who is the support of all, stands always, at every time, in the most exalted state, joined with him as his equal share.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
பாடல் #1179 இல் உள்ளபடி பத்துத் திசைகளையும் பத்து முகங்களாகக் கொண்ட எமது பராசக்தியான இறைவி,
As in verse #1179, our Parasakthi, who holds the ten directions as ten faces,
- வரி 2Line 2
உயிர்கள் உய்ய வேண்டும் என்று நான்கு வேதங்களையும் அவற்றின் ஆறு அங்கங்களையும் உருவாக்கி வைத்து அருளினாள்.
graciously created and set in place the four Vedas and their six angas, so that souls might be delivered.
- வரி 3Line 3
அவளே அனைத்திற்கும் ஆதாரமான இறைவனுடன் ஒன்றாகச் சேர்ந்து, மிகவும் உயர்ந்த நிலையில் நிற்கின்றாள்.
She herself, united as one with God, who is the support of all, stands in the most exalted state.
- வரி 4Line 4
எல்லாக் காலத்திலும் எப்போதும் இறைவனுடன் சரிசமமான பாகமாகச் சேர்ந்தே நிற்கின்றாள்.
At every time, always, she stands joined with him as his equal share.
திருமந்திரம் பாடல் #1180





