தொடர்ந்து படிக்கread this section continuously
தாரமும் மாகுவள் தத்துவ மாய்நிற்பள்காரண காரிய மாகுங் கலப்பினள்பூரண விந்து பொதிந்த புராதனிபாரள வாந்திசை பத்துடை யாளே.
உரைmeaning
பாடல் #1178 இல் உள்ளபடி இறைவனோடு துணையாக இருக்கின்ற இறைவியின் தன்மைகளை இந்தப் பாடலில் அறிந்து கொள்ளலாம். இறைவனுக்குத் துணையாகவும் இருக்கின்ற இறைவி, அதன் அனைத்துத் தத்துவங்களாகவும் நிற்கின்றாள். இறைவன் உலகங்களை உருவாக்க வேண்டும் என்று எண்ணிய போது அதன் காரணமாகவும், இறைவன் எண்ணியபடியே உலகங்களைப் படைக்கும் போது அதன் காரியமாகவும், எப்போதும் இறைவனோடு கலந்தே இருக்கின்றாள் இறைவி. இறைவனின் பரிபூரண ஜோதியாகிய ஒளி உருவத்தோடு கலந்து அதனுள்ளே சக்தியாக அடங்கியிருக்கின்ற ஆதியான இறைவி, உலகங்கள் அனைத்தின் அளவுக்கும் பரந்து விரிந்து, அதையும் தாண்டிப் பத்துத் திசைகளையும் தமக்குள் கொண்டவளாக இருக்கின்றாள்.
This verse lets us know the qualities of the Goddess who is the consort of God, as in verse #1178. The Goddess, who is also the consort of God, stands as all its tattvas. When God intends that the worlds be made, she remains united with him always as the cause of it, and when God creates the worlds exactly as he intended, she remains as the effect of it. The primal Goddess, united with God's own perfectly full light-form, abiding within it as Shakti, spreads and extends to the measure of all the worlds, and beyond that too, holding all ten directions within herself.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
பாடல் #1178 இல் உள்ளபடி இறைவனுக்குத் துணையாகவும் இருக்கின்ற இறைவி, அதன் அனைத்துத் தத்துவங்களாகவும் நிற்கின்றாள்.
As in verse #1178, the Goddess, who is also the consort of God, stands as all its tattvas.
- வரி 2Line 2
இறைவன் உலகங்களை உருவாக்க வேண்டும் என்று எண்ணிய போது அதன் காரணமாகவும், இறைவன் எண்ணியபடியே உலகங்களைப் படைக்கும் போது அதன் காரியமாகவும்,
When God intends that the worlds be made, she remains as the cause of it, and when God creates the worlds exactly as he intended, she remains as the effect of it,
- வரி 3Line 3
எப்போதும் இறைவனோடு கலந்தே இருக்கின்றாள் இறைவி.
always remaining united with God, the Goddess.
- வரி 4Line 4
இறைவனின் பரிபூரண ஜோதியாகிய ஒளி உருவத்தோடு கலந்து அதனுள்ளே சக்தியாக அடங்கியிருக்கின்ற ஆதியான இறைவி, உலகங்கள் அனைத்தின் அளவுக்கும் பரந்து விரிந்து, அதையும் தாண்டிப் பத்துத் திசைகளையும் தமக்குள் கொண்டவளாக இருக்கின்றாள்.
The primal Goddess, united with God's own perfectly full light-form, abiding within it as Shakti, spreads and extends to the measure of all the worlds, and beyond that too, holding all ten directions within herself.
திருமந்திரம் பாடல் #1179





