திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1178

நான்காம் தந்திரம்8. ஆதார ஆதேயம்

தொடர்ந்து படிக்கread this section continuously

வாயு மனமுங் கடந்த மனோன்மணிபேயுங் கணமும் பெரிதுடைப் பெண்பிள்ளைஆயு மறிவுங் கடந்த அரனுக்குத்தாயு மகளுநல் தாரமு மாமே.

உரை

பாடல் #1177 இல் உள்ளபடி சாதகர்கள் தமக்குள்ளே தேடி அறிந்து கொண்ட இறைவியானவள் இறைவனுடன் எப்படிச் சேர்ந்திருக்கின்றாள் என்பதை இந்தப் பாடல் அறிந்து கொள்ளலாம். வாக்கால் சொல்ல முடியாதவளும், எண்ணங்களால் எளிதில் கற்பனை செய்து பார்க்க முடியாதவளும் ஆகிய மனோன்மணி எனும் இறைவி, தனது பெண் தன்மையில் என்றும் இளமையுடன் இருந்து, உலகங்களின் இயக்கம் நடைபெறுவதற்கு, எண்ணங்களோடு இருக்கின்ற ஆன்மாக்களையும் தேவ கணங்களையும் அதிகமாக வைத்து இயக்குகின்றாள். கல்வி அறிவால் எவ்வளவு ஆராய்ந்தாலும் உணர்ந்து கொள்ள முடியாத இறைவனுக்கு, அவளே தாயாகவும், மகளாகவும், என்றும் நன்மை தரும் துணைவியாகவும் இருக்கின்றாள்.

வரி வாரியாக

  • வரி 1

    பாடல் #1177 இல் உள்ளபடி சாதகர்கள் தமக்குள்ளே தேடி அறிந்து கொண்ட இறைவியானவள், வாக்கால் சொல்ல முடியாதவளும் எண்ணங்களால் எளிதில் கற்பனை செய்து பார்க்க முடியாதவளும் ஆகிய மனோன்மணி எனும் இறைவி.

  • வரி 2

    தனது பெண் தன்மையில் என்றும் இளமையுடன் இருந்து, உலகங்களின் இயக்கம் நடைபெறுவதற்கு, எண்ணங்களோடு இருக்கின்ற ஆன்மாக்களையும் தேவ கணங்களையும் அதிகமாக வைத்து இயக்குகின்றாள்.

  • வரி 3

    கல்வி அறிவால் எவ்வளவு ஆராய்ந்தாலும் உணர்ந்து கொள்ள முடியாத இறைவனுக்கு அவளே தாயாகவும் இருக்கின்றாள்.

  • வரி 4

    அவளே மகளாகவும், என்றும் நன்மை தரும் துணைவியாகவும் இருக்கின்றாள்.

திருமந்திரம் பாடல் #1178

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout